நாய்கள் சிறுநீர் கழிக்க டிரம்ப் சிலையை வைத்த அமெரிக்க இளைஞர்

நியூயார்க்

மெரிக்க அதிபர் டிரம்ப்பின் சிலையை நாய்கள் சிறுநீர் கழிப்பதற்காக என அமைத்து ஒரு வாலிபர் வைத்து தனது எதிர்ப்பை காட்டி உள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது அமெரிக்கர்களிடையே கடும் அதிருப்தி உள்ளது. அவரது பல செயல்பாடுகள் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. அவரைக் குறித்து பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு தங்கள் எதிர்ப்பை காட்டி வருகின்றனர். ஒரு அமெரிக்க இளைஞர் விசித்திரமான முறையில் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

அமெரிக்க இளைஞர் பில் கிப்லே என்பவருக்கு டிரம்பின் செயல்பாடுகள் சிறிதும் பிடிக்காமல் இருந்துள்ளது. டிரம்ப் ஒரு அதிபராக செயல்படவே இல்லை என பலமுறை தெரிவித்துள்ளார். நீயூயார்க் நகரில் உள ப்ரூக்ளின் பகுதியில் சாலை ஓரத்தில் உள்ள ஒரு புல் வெளியில் டொனால்ட் டிரம்பின் மார்பளவு சிலை ஒன்றை அவர் நிறுவினார்.

சுமார் ஒரு அடி உயரமுள்ள அந்த சிலையின் கீழ் “நாய்கள்  என் மீது சிறுநீர் கழிக்கவும்” என எழுதப்பட்டுள்ளது. பில் கிப்லே இவ்வாறு எதிர்ப்பு தெரிவித்த விவரம் பத்திரிகைகளில் பரபரப்பாக பதியப்பட்டு வருகிறது. இந்த புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: American youth kept Trump's statue in road for dogs urinating
-=-