உலகக் கோப்பை கால்பந்து 2026 : அமெரிக்கா, கனடா, மெக்சிகோ நடத்த உள்ளன

மாஸ்கோ

லகக் கோப்பை கால்பந்து 2026 போட்டிகளை நடத்த ஏலத்தில் அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ இணந்த அணி வெற்றி பெற்றுள்ளது.

உலகக் கோப்பை 2026 போட்டிகளை நடத்த உள்ள நாடுகளை தேர்ந்தெடுக்க 210 நாடுகள் கலந்துக் கொண்ட  ஏலப்போட்டி ஒன்று நடைபெற்றது.   இதில் யுனைடெட் 2026 என்ற பெயரில் அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் இணைந்து ஓரணியாக நின்றன.  எதிரணியில் மொராக்கோ இருந்தது.

இரு அணிகளும் சரிசமமாக இருந்ததால் தேர்தல் நடத்தப்பட்டது.   மொத்தமுள்ள 210 நாடுகளில் 203 நாடுகள் வாக்களித்தன.   இதில் யுனைடெட் 2026 அணிக்கு 134 வாக்குகளும், மோராக்கோவுக்கு 65 வாக்குகளும் கிடைத்தன. ஒருவர் வாக்களிக்கவில்லை.  முன்று செல்லாத வாக்குகள்பதிவாகின

அதை ஒட்டி 2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ நாடுகளில் நடைபெற உள்ளன.   இந்தப் போட்டிகளில் முதல் முறையாக 48 அணிகள் பங்கேற்க உள்ளன.

மொராக்கோ நாடு ஏற்கனவே 1994, 1998 2006 மற்றும் 2010 ஆம் ஆண்டுக்கான  போட்டிகளை நடத்த முயன்று தோல்வி அடைந்துள்ளது.   மொராக்கோ அணிக்கு இது ஐந்தாவது தோல்வி ஆகும்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: America with Mexico and Canada will held FIFA 2026
-=-