திருச்சி: அவசரப்பட்டு முடிவெடுக்க முடியாது, கூட்டணி தர்மம் மதிக்கப்பட வேண்டும் என ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் குறித்து, மாநில பாஜக தலைவர்  அண்ணா மலை தெரிவித்து உள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா ஜனவரி 4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இதையடுத்து, அந்தத் தொகுதி காலியான தாக அறிவிக்கப்பட்ட நிலையில், அத்தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நேரத்தில் இருந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டுள்ளதால். திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டு உள்ளார். அதிமுக கூட்டணி சார்பில், ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிடப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதிமுக இரண்டாக உடைந்துள்ளதால், இபிஎஸ் ஒருபுறமும், ஒபிஎஸ் மறுபுறமும் வேட்பாளர்களை அறிவிக்கப்பபோவதாக கூறி வருகின்றனர். அதே வேளையில் பாஜகவும் தனித்து போட்டியிட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன.

இந்த நிலையில், திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலை,  ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் விவகாரத்தில் எடுத்தோம் கவிழ்த்தோம் என முடிவு செய்ய முடியாது. கூட்டணி தர்மம் மதிக்கப்பட வேண்டும். கூட்டணி தர்மப்படி நடந்து கொண்டால் தான் அனைவருக்கும் மதிப்பு இருக்கும்” “கூட்டணியில் பெரிய கட்சி அதிமுக தான்” “போட்டியிடும் வேட்பாளர் தகுதி வாய்ந்தவராக இருக்க வேண்டும்” “கூட்டணிக்கென்று மரபு, தர்மம் உள்ளது அதிமுக – பாஜக கூட்டணி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளரின் வெற்றியே முதன்மையான நோக்கம். திமுக – காங்கிரஸ் வேட்பாளரை எதிர்கொள்ளும் வகையில் பலமான வேட்பாளரை நிறுத்த வேண்டும். இடைத்தேர்தல் விவகாரத்தில் விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.