டிவிட்டரில் பரப்பரப்பாகும் அழகிரியின் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து

சென்னை

மு க அழகிரி டிவிட்டரில் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து அளித்தது பரபரப்பாகி உள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி இந்துப் பண்டிகைகளுக்கு வாழ்த்துச் செய்தி தெரிவிப்பதில்லை.   அவர் குடும்பத்தினருக்கு சொந்தமான கலைஞர் தொலைக்காட்சியில் இந்து பண்டிகை சிறப்பு நிகழ்ச்சிகளை விடுமுறை நாள் சிறப்பு நிகழ்ச்சிகள் என கூறுவது சமூக வலை தளங்களில் விமர்சிக்கப்படுவது வழக்கமாகி உள்ளது.

இந்நிலையில் கருணாநிதியின் மூத்த மகன் அழகிரி தனது டிவிட்டரில், “விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்” என பதிந்துள்ளார்.   இது அவருடைய ஃபாலோயர்களிடையே கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   இந்த பதிவை ஆதரித்தும் எதிர்த்தும் பின்னூட்டங்கள் பதியப்பட்டு வருகின்றன.

ஒரு திக தொண்டர், “இந்த மாதிரி செயல்களால் தான் நீங்கள் நாசமானதே. ஆக சிறந்த பகுத்தறிவாளர் பெரியாரின் மாணவர் கலைஞர், இறுதி வரை கொண்ட கொள்கையில் உறுதியாகவும் இருந்தவர்” என பதிந்துள்ளார்.  மற்றொரு ஃபாலோயர், “நீங்களாவது உங்கள் தம்பிமாதிரி ஓட்டுக்காக வீட்டுல கொண்டாடிக்கிட்டு வெளியில் ……    …….. குஷிப்படுத்த விடுமுறை தின நல்வாழ்த்து சொல்லாம மனம் திறந்து வாழ்தியமைக்கு நன்றி.. இதே ட்ரன்ட்ல திமுக போனா ஒரு சீட்டுக்கூட தேறாது தல… பாத்துக்குங்க” என பதிந்துள்ளார்.

இது போல பலர் அழகிரிக்கு பதிலுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Alagiri's tweet regarding ganesh chathurthi creates a trend in twitter
-=-