அஜீத் பாடலுக்கு தடை போட்ட  விஷால்!

Must read

2
நட்சத்திர கிரிக்கெட் நடத்தி டி.வி. விளம்பரம் மூலமாக ஏழு கோடிக்கும் மேல் அள்ளிவிட்டது நடிகர் சங்கம். ஆனால் விளையாட்டு நடந்த மைதானத்துக்கு கூட்டம் வரவில்லை. ஆகவே எரிச்சலான விஷால், “தமிழக மக்கள் கிரிக்கெட் பார்க்க வராமல் ஏமாற்றிவிட்டார்கள். அவர்களை சும்மா விடமாட்டோம். டி.வி. சீரியல்களில் நடித்து அவர்களை பழிவாங்குவோம்” என்று கிண்டலாக தனது எரிச்சலை வெளிப்படுத்தினார்.
இது சர்ச்சை ஆனது.
இதற்கிடையே அதே நட்சத்திர கிரிக்கெட் விசயத்தில் இன்னொரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் விஷால்.
போட்டி நடந்த முடிந்த பிறகு, அன்று இரவு நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடிகர்களுக்கு கிராண்ட் ஆன விருந்து நடந்தது. அப்போது,  பல நடிகர்களின் ஹிட் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன. அஜித் நடித்த வேதாளம் படத்தின் ‘ஆளுமா டோலுமா’ என்ற பாடல் ஒலிக்க…  விஷால் டென்ஷன் ஆகி, “அந்த ஆளு பாட்ட நிறுத்து” என சத்தம்போட்டு நிறுத்தச் சொல்லிவிட்டார்.
அஜீத் பாடலுக்கு விஷல் தடை போட காரணம், நடிகர் சங்க செயல்பாடுகளில் அஜீத் ஆர்வம் காட்டாதது, நட்சத்திர கிரிக்கெட் நடத்துவதற்கு பதிலாக நடிகர்களே நன்கொடை அளித்து சங்க கட்டிடத்தைக் கட்டலாம் என சொன்னது ஆகியவைதான்.
விஷால் மீது இப்போது கடும் எரிச்சலில் இருக்கிறார்கள் அஜீத் ரசிகர்கள். சமூக வலைதளங்களில் விஷாலை உண்டு இல்லை என்று ஆக்கி வருகிறார்கள்.

More articles

Latest article