சபரிமலை : கட்டுப்பாடுகளால் கவலையடைந்த தமிழ்நாடு பக்தர்கள்

சென்னை

மிழ்நாட்டில் இருந்து செல்லும் ஐயப்ப பக்தர்கள் தற்போது விதிக்கபபட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.


கேரளாவில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தமிழ்நாட்டை சேர்ந்த லட்சக்கணகான பக்தர்கள் ஆண்டு தோறும் சென்று தரிசித்து வருகின்றனர். மண்டல பூஜை, மகரஜோதி காலங்களில் மட்டுமின்றி மாத பூஜைகளுக்கும் திறள் திறளாக செல்கின்றனர். அனைத்து வயதுப் பெண்களும் கோவிலுக்கு செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்ததால் நடந்த போராட்டத்தினால் தற்போது கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த கட்டுப்பாட்டுக்களால் தமிழ்நாட்டில் இருந்து செல்லும் ஐயப்ப பக்தர்கள் கடும் கவலை அடந்துள்ளனர். தமிழ்நாட்டை சேர்ந்த முன்னாள் வங்கி அதிகாரி ரமேஷ் கடந்த 40 வருடங்களாக தொடர்ந்து சபரிமலை சென்று வருகிறார். தமிழ்நாட்டில் இருந்து வரும் பக்தர்களுக்கு உதவ தமிழ்நாடு அரசு ஒரு உதவி மையம் அமைக்க வேண்டும் என விடுத்த கோரிக்கைக்கு இதுவரை பதில் இல்லை என ரமேஷ் தெரிவிக்கிறார்.

ரமேஷ் செய்தியாளர்களிடம், “நாங்கள் சென்னையில் இருந்து ஒரு பெரிய குழுவாக சபரிமலை செல்வோம். தற்போது நாங்கள் ஐவர் பெங்களூருவில் இருந்து செல்ல இருக்கிறோம். நாங்கள் வண்டிப்பெரியாரில் தங்கி அங்கிருந்து நிலக்கல் வரை செல்ல மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நாங்கள் தரிசனம் மற்றும் பேருந்து சீட்டை ஏற்கனவே பதிவு செய்துள்ளோம்.

ஆனால் தற்போது இளம் பெண்களுக்கு மட்டும் இன்றி ஆண்களுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக சரண கோஷம் போட தடை விதிக்கபட்டுள்ள்ளது. அத்துடன் மவுனமாக பிரார்த்தனை செய்து விட்டு மாலை 7 மணிக்குள் மலையை விட்டு இறங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

சென்னையில் இருந்து நடந்தே சபரிமலை செல்பவரான அனந்த பத்மநாபன், “கடந்த அக்டோபர் மாதம் நான் சபரிமலை சென்ற போது காவல்துறையினரல் நிறுத்தப்பட்டேன். அவர்களிடம் நான் ஐயப்பன் தரிசனத்துக்காக தனியாக வந்துள்ளதாக தெரிவித்ததும் அனுமதிக்கப்பட்டேன். நான் ஒரு முறை காசியில் இருந்தே மலைக்கு நடந்து வந்துள்ளேன். இந்த கட்டுப்படுகளால் பாதிப்பு அடைய மாட்டேன்” என தெரிவித்துள்ளார்.

மற்றொரு பக்தரான கிருஷ்ணன், “நான் ஒவ்வொரு வருடமும் சபரிமலையில் அங்கப் பிரதட்சனம் செய்வது வழக்கம். (அங்கப் பிரதட்சணம் என்பது ஈர உடைகளுடன் கோவிலை உருண்டபடி வலம் வருவதாகும்). இந்த வருடம் என்னை அதற்கு அனுமதிப்பார்களா என தெரியவில்லை. செய்திகளை பார்க்கும் போது நான் இனி மலைக்கு அவசியம் வர வேண்டுமா என யோசிக்கிறேன்.   இனி உள்ளூர் ஐயப்பன் கோவிலில் நான் தரிசனம் செய்யலாம் என எண்ணியுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணன் மட்டுமின்றி பல பக்தர்கள் இந்த கட்டுப்பாட்டுக்களால் மிகவும் கலக்கம் அடைந்துள்ளனர். இவ்வாறு அளவுக்கு மீறிய கட்டுப்பாடுகள் இருந்தால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைய வாய்ப்புண்டு என பல ஐயப்ப பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Aiyappa devotees from Tamilnadu worried about sabarimlai restrictions
-=-