பயணம் முழுவதும் இந்திய விமானங்கள் கண்காணிக்கப்படும்

டில்லி

ந்திய விமான நிறுவனங்கள் தங்கள் விமானங்களை பயணம் முழுவதும் இன்று முதல் கண்காணிக்க உள்ளன.

கடந்த 4 வருடங்களுக்கு முன்பு மலேசிய விமானம் ஒன்று காணாமல் போனது. அந்த விமானம் இன்று வரை கிடைக்கவில்லை. விமானம் காணாமல் போனது மர்மமாகவே உள்ளது. இதனால் உலகில் உள்ள அனைத்து விமான நிறுவனங்களும் விமானங்களை கண்காணிக்க திட்டமிட்டுள்ளன.

அதனால் இந்திய விமான நிறுவனங்கள் பயணம் முழுவதும் கண்காணிக்க உள்ளன. ஒவ்வொரு 15 நிமிடமும் விமானம் எங்குள்ளது மற்றும் விமானத்தில் உள்ள நிலை என்ன என்பதை அவ்வப்போது கண்காணிப்பு மூலம் அறிந்துக் கொள்ள முடியும்.

அத்துடன் பயணிகள் நடமாட்டம் குறித்தும் இந்த கண்காணிப்பு மூலம் விமான நிறுவனங்கள் உடனக்குடன் தெரிந்துக் கொள்ள முடியும். இதனால் விமானம் கடத்துபவர்கள் தங்கள் முயற்சியை செய்யும் முன்பே நிறுவனம் எச்சரிக்கை அடைந்து உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியும் என கூறப்படுகிறது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Airline operators in India to monitor flights throughout the journey
-=-