டில்லி,

ர்செல் மாக்சிஸ் வழக்கில் ஆஜராக மறுத்து வரும் மலேசிய நிறுவன தலைவர் அனந்த கிருஷ்ணனுக்கு சிபிஐ நீதி மன்றம் கடும் எச்சரிக்கை விடுத்தது.

விசாரணைக்கு ஆஜராக அனுப்பிய சம்மனை ரத்துச்செய்யக்கோரியதையும் தள்ளுபடி செய்தனர்.

மேலும் ,இரண்டு வாரத்திற்குள் அவர்கள்  கோர்ட்டு முன் ஆஜராகவில்லை என்றால் ஏர்செல் மேக்ஸிஸ் லைசென்சை ரத்து செய்ய நேரிடும் என எச்சரித்தனர்.

மேலும், கோர்ட்டில் ஆஜராக அவரால் இந்தியா வர முடியாது என்றால், அவருக்கு ஸ்பெக்டரம் எப்படி விற்கப்பட்டது என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

குற்றம்சாட்டப்பட்டவர்கள் வழக்கு விசாரணையில் இருந்து தப்பிக்க முடியாது எனவும், இது குறித்து இரண்டு பிரபலமான மலேசிய பத்திரிகைகளில் அறிவிப்பு வெளியிடவும் உத்தரவிட்டனர்.

 

ஏர்செல் – மாக்சிஸ் விவகாரத்தில் ரூ. 742.58 கோடி அளவுக்கு நிதி முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கப் பிரிவு  மாறன் சகோதரர்கள்மீது  குற்றச்சாட்டு கூறியுள்ளது.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்புடைய வழக்குகளை விசாரித்து வரும் டில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஏர்செல் – மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கும் நடைபெற்று வருகிறது.

ஏர்செல் நிறுவனத்திற்கு 2G லைசென்ஸ் தருவதற்காக, அந்நிறுவனத்தின் பங்குகளை மிரட்டி மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்க வைத்ததாக அப்போதைய தொலை தொடர்பு அமைச்சர் தயாநிதி மாறன் கூறியதாகவும்,

அதன் மூலம் தங்களுடைய குடும்ப நிறுவனமான சன் குழுமத்தில் மேக்சிஸ் நிறுவனம் முதலீடு செய்ய வழி வகுத்ததாகவும் கூறி, அன்றைய மத்திய தொலை தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறன் மற்றும் அவரது அண்ணனும், சன் குழும மேலாண்மை இயக்குநருமான கலாநிதிமாறன் ஆகிய இருவர் மீதும் சி.பி.ஐ வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கில் மலேசியாவை சேர்ந்த மாக்சிஸ் நிறுவன தலைவர் அனந்தகிருஷ்ணனை கோர்ட்டில் ஆஜராக வலியுறுத்தி சிபிஐ நீதிமன்றம் பலமுறை  சம்மன் அனுப்பியது. சம்மனை அவர்கள்  பெற்றுக்கொள்ள மறுத்ததால், சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அவர்களுக்கு பிடிவாரண்ட் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.