ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: ப.சிதம்பரத்தை ஜூலை10-ம் தேதி கைது செய்ய தடை!

டில்லி:

ர்செல்-மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை ஜூலை10-ம் தேதி கைது செய்ய இடைக்கால தடை விதித்து அமலாக்கத்துறைக்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில்  ஜூன் 5ந்தேதி வரை ப.சிதம்பரத்தை கைது செய்ய தடை விதித்து  டில்லி பாட்டியாலா கோர்ட்டு ஏற்கனவே  உத்தரவிட்டு உள்ளது. இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, சிதம்பரத்தின் கோரிக்கையை ஏற்று,  ஜூலை10-ம் தேதி வரை அமலாக்கத்துறை  கைது செய்ய இடைக்கால தடை விதித்து பாட்டியாலா கோர்ட்டு  உத்தரவிட்டுள்ளது.

மத்திய நிதி  அமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, மாறன் சகோதரர்களுக்கு ஆதரவாக  ஏர்செல் நிறுவனப் பங்குகளை மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்பனை செய்ய கட்டாயப்படுத்தியதாக புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் கார்த்தி சிதம்பரத்தின் அட்வான்டேஜ் கன்சல்டிங் நிறுவனம் ஆதாயம் அடைந்ததாகவும்,  சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.. இந்த விவகாரத்தில் ப.சிதம்பரத்துக்கும் தொடர்பு இருப்பதாக சிபிஐ, அமலாக்கத் துறை தரப்பில் குற்றச்சாட்டு கூறியிருந்தது.

வழக்கு விசாரணையில் ப.சிதம்பரத்தை ஜூலை10-ம் தேதி கைது செய்ய  இடைக்கால தடை விதித்து பாட்டியாலா நீதி மன்றம்  அமலாக்கத்துறைக்கு  உத்தரவிட்டுள்ளது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Aircel-Maxis case: Court gives P. Chidambaram protection from arrest by ED till 10 July., ஏர்செல்- மேக்சிஸ் வழக்கு!! அமலாக்க துறை மேல்முறையீடு
-=-