அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன் ஓபிஎஸ்-சுக்கு ஆதரவு!

Must read

சென்னை,

மிழக முதல்வர் ஓபிஎஸ்-க்கு அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் இன்று  நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். இதன் காரணமாக அதிமுகவில் ஓபிஎஸ்சின் பலம் கூடி வருகிறது.

அதிமுக சட்டமன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து, தமிழக முதல்வராக பதவி ஏற்கும் வகையில் ஓபிஎஸ்-ஐ மிரட்டி, முதல்வர் பதவியை  ராஜினாமா செய்யச்சொல்லி கடிதம் பெறப்பட்டதாக பன்னீர் அதிரடியாக புகார் கூறினார்.

இதையடுத்து கட்சி பொருளாளர் பதவியில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டார். மீண்டும் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்டி தனது பெரும்பான்மையை நிரூபித்தார் சசிகலா. அதில் ஓபிஎஸ் குறித்து பல குற்றச்சாட்டுக்களை கூறினார்.

இதன் காரணமாக அதிமுகவில் அசாதரண சூழல் நிலவி வருகிறது. ஒருசில எம்எல்ஏக்கள் ஒபிஎஸ்-ஐ ஆதரித்து வருகின்றனர்.  இதற்கிடையில் இன்று மாலை சசிகலா கவர்னரை சந்தித்து முதல்பதவி ஏற்க அழைக்குமாறு வலியுறுத்த உள்ள நிலையில், அதிமுக அவைத்தலைவராக இருந்த மதுசூதனன் இன்று காலை திடீரென்று ஓபிஎஸ் ஐ சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.

அப்போது, எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட அ.தி.மு.க. காப்பாற்றப்பட வேண்டும் என்று கூறினார்.

தற்போது அதிமுக நிர்வாகிகள்  ஒவ்வொருவராக ஓபிஎஸ் பக்கம் சாய்ந்து வருவது தமிழக அரசியலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

More articles

Latest article