மும்பை: ரெப்போ ரேட் 6.25%,ஆக உயர்த்தப்படுவதாகவும்,  2023ம் நிதிஆண்டு ஜிடிபி 6.8% ஆகவும் இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளதாகவும்,  ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்து உள்ளார்.

3நாபட்கள் நடைபெற்ற ஆர்பிஐ எம்பிசி கூட்டம், அதாவது பணவியல் கொள்கைக் குழு (எம்பிசி) கூட்டம் முடிந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த, ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ்,  ரெப்போ விகிதத்தை 35 அடிப்படை புள்ளிகள் (பிபிஎஸ்) உயர்த்தி 6.25 சதவீதமாக அறிவித்தது. மேலும், மத்திய வங்கி நடப்பு நிதியாண்டிற்கான வளர்ச்சி கணிப்பை 6.8 சதவீதமாகக் குறைத்துள்ளது என தெரிவித்தார்.

இந்திய ரிசர்வ் வங்கி: மூன்று நாட்களாக நடந்து வந்த இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) நிதிநிலை மறுஆய்வுக் கொள்கையின் கூட்டம் இன்று நிறைவடைந்தது. கூட்டத்திற்குப் பிறகு, செய்தியாளர்களை சந்தித்த ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ், ரெப்போ விகிதத்தை 35 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியுள்ளது.  இதன் மூலம் ரெப்போ விகிதம் 6.25 சதவீதமாக உயர்ந்துள்ளது. முன்னதாக செப்டம்பர் 30 ஆம் தேதி, மத்திய வங்கி ரெப்போ விகிதத்தை 5.90 சதவீதமாக உயர்த்தியது. பண மதிப்பாய்வு கொள்கையை அறிவித்த மத்திய வங்கியின் ஆளுநர், பணவீக்கம் இன்னும் கவலைக்குரிய விஷயமாகவே உள்ளது என்றார்.

ரெப்போ விகிதத்தின் உயர்வு,  வட்டி விகிதத்தை பாதிக்கும் மற்றும் உங்கள் EMI அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, எம்பிசியின் பரிந்துரையின் அடிப்படையில், ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை மே 4ஆம் தேதி 0.4 சதவீதமும், ஜூன் 8ஆம் தேதி 0.5 சதவீதமும், ஆகஸ்ட் 5ஆம் தேதி 0.5 சதவீதமும், செப்டம்பர் 30ஆம் தேதி 0.5 சதவீதமும் உயர்த்தியது. மே மாதம், மத்திய வங்கியில் இருந்து திடீரென வட்டி விகிதம் 0.40 சதவீதம் உயர்த்தப்பட்டது. ரெப்போ விகித உயர்வு வீட்டுக் கடன், கார் கடன் மற்றும் தனிநபர் கடன் ஆகியவற்றின் இஎம்ஐ தொகையை பாதிக்கும். 2023 நிதியாண்டில் சில்லறை பணவீக்க விகிதம் 6.7 சதவீதமாக ரிசர்வ் வங்கியால் தக்கவைக்கப்பட்டுள்ளது.

ரெப்போ விகிதத்தை அதிகரிப்பதன் நேரடி விளைவு வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் கடனில் காணலாம். இதனால் கடன் வாங்கும் செலவு அதிகரிக்கும். வங்கிகளில் பணம் அதிக விலைக்கு வந்தால், கடனுக்கான வட்டி விகிதமும் அதிகரிக்கும். வங்கிகள் இந்த பாதிப்பை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும். செவ்வாயன்று, உலக வங்கி நடப்பு 2022-23 நிதியாண்டிற்கான நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி கணிப்பை 6.5 சதவீதத்தில் இருந்து 6.9 சதவீதமாக உயர்த்தியுள்ளது.

ரெப்போ விகிதம் என்றால் என்ன?

ரெப்போ ரேட் என்பது ரிசர்வ் வங்கியால் எந்த வங்கிக்கும் கடன் கொடுப்பதற்கான வட்டி விகிதமாகும். இதன் அடிப்படையில் வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்கு கின்றன. இது தவிர, ரிவர்ஸ் ரெப்போ ரேட் என்பது வங்கிகளின் டெபாசிட்டுகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் வட்டி விகிதமாகும். ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதத்தை அதிகரிப்பதால், வங்கிகளின் சுமை அதிகரித்து, வங்கிகள் வட்டி விகிதத்தை அதிகரிப்பதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு அந்த சுமையை கொடுக்கின்றன.