அ தி மு க முன்னாள் எம் எல் ஏ கைது

கோயம்புத்தூர்

தி மு க முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சின்னசாமி கைது செய்யப்பட்டுள்ளார்.

கோயம்புத்தூரை சேர்ந்த சின்னசாமி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஆவார்.   இவர் அ தி முக வின் தொழிற்சங்கமான அண்ணா தொழிற்சங்கத்தில் செயலாளராக இருந்தார்.  தற்போது இவர் டிடிவி தினகரன் அணியில் சேர்ந்து அ ம மு க வில் உள்ளார்.

இவர் அண்ணா தொழிற்சங்க செயலாளர் பதவியில் இருந்த போது ரூ. 8 கோடி கையாடல் செய்ததாக புகார் எழுந்தது.  இந்தப் புகாரை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை விசாரித்து வருகிறது.  இந்த புகாரின் அடிப்படையில் நேற்று சின்னசாமி கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: ADMK Ex mla arrested
-=-