‘காலா’ படத்துக்கு கூடுதல் டிக்கெட் கட்டணம்: நடவடிக்கை எடுக்க அரசுக்கு உயர்நீதி மன்றம் உத்தரவு

சென்னை:

ஜினி நடித்து வெளிவந்துள்ள காலா படத்துக்கு தியேட்டர்களில்  கூடுதல் டிக்கெட் கட்டணம் வசூலித்தால் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் தனுஷ் தயாரிப்பில், ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த காலா படம் பல்வேறு சர்ச்சைகளுக்கிடையே கடந்த வாரம் வெளியானது. காலா படத்துக்கு தியேட்டர்களில் அதிக கட்டணம் வசூல் செய்வதாகவும் புகார் கூறப்பட்டது.

இந்தநிலையில் தேவராஜன் என்பவர் இதுகுறித்து  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் இன்றைய விசாரணையின்போது, தியேட்டர்களில் கூடுதல் சினிமா கட்டணம், பார்க்கிங் கட்டணம் வசூலிப்பதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது பற்றி ஒரு வாரத்தில் தமிழக அரசு பதில் தர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து   தியேட்டர்களில் அரசு நிர்ணயித்ததை விட  கூடுதல் சினிமா கட்டணம், பார்க்கிங் கட்டணம் வசூலிக்கும் தியேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,  காலா படம் வெளியாகியுள்ள தியேட்டர்களில் கூடுதல் டிக்கெட் கட்டணம் மற்றும் பார்க்கிங் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
English Summary
Additional ticket charges for 'Kaala' film: Chennai High Court order to the Tamilnadu Government to take action