அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனாஸை மணந்தார் இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா

மெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனாஸ் இந்தி திரைப்பட நடிகை பிரியங்கா சோப்ரா திருமணம் இன்று நடைபெற்றது.

2000 ம் வருடம் உலக அழகி பட்டத்தை வென்ற பிரியங்கா சோப்ரா தமிழில் விஜய்யுடன் தமிழன்  படத்தில் நடித்தார். இதற்கடையில் இந்தித் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக ஆனார்.

தவிர,  குவாண்டிகா என்ற தொலைக்காட்சி தொடர் மூலம் மேற்கத்திய நாடுகளிலும் பிரபலமாகி ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார்

இந்த நிலையில் இவரும் அமெரிக்க பாப் பாடகர்  நிக் ஜோனாசும் காதலிக்க ஆரம்பித்தனர்.  கடந்த ஜுலை மாதம் இருவருக்கும் மும்பையில் உள்ள பிரியங்கா சோப்ரா வீட்டில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது

நிக் ஜோனாஸ் பிரியங்கா சோப்ராவை விட 10 வயது இளையவர். இவர்கள் திருமணம் டிசம்பர் மாதம் நடைபெறும் என ஏற்கனவே அறிவித்திருந்தனர்.

திருமணத்துக்கு பிறகு கலிபோர்னியாவில் உள்ள பெவர்லி ஹில்ஸ் பகுதியில் ஆடம்பர வீடு ஒன்றில் குடியேற இருக்கிறார்கள்.  இவர்களது திருமண ஏற்பாடுகள் கடந்த நவம்பர் 29 ஆம் தேதி மெகந்தி விழாவுடன் ஆரம்பித்தது. அதைத்தொடர்ந்து திருமண விழா நான்கு நாட்கள் நடைபெற இருக்கிறது.

இந்த நிலையில், ராஜஸ்தான் ஜோத்பூரில் இவர்களது திருமணம் நடைபெற்றது. திரையுலக பிரபலங்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

#actress #priyankachopra #married #american #pop #singer #nick

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: actress-priyanka-chopra-married american pop singer nick-
-=-