நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மாயம்!

டிகர் பவர் ஸ்டார் சீனிவாசனை காணவில்லை என்று அவரது மனைவி ஜூலி காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

லத்திகா, கண்ணா லட்டு திங்க ஆசையா,ஐ , கோலி சோடா உள்ளிட்ட பல தமிழ்த் திரைப்படங்களில் நடித்தவர் பவர் ஸ்டார் சீனிவாசன். நடிகர் சந்தானத்தின் தயாரிப்பில் உருவான, கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படத்தில் மூலம்  பிரபலமானவர்.

இவர் சென்னை அண்ணா நகரில் வசித்து வருகிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் பட வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி புதுவண்ணாரப்பேட்டை சேர்ந்த தயாநிதி என்வரிடம் மோசடியில் ஈடுபட்டதாக  காவல்துறையினர் இவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் மீது மேலும் சில புகார்கள் உள்ளன.

இந்த நிலையில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் திடீரென காணாமல் போய் விட்டாதாகவும், அவரை  கண்டுபிடித்து தருமாறு அவரது மனைவி ஜூலி சென்னை அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் சீனிவாசனை சிலர் பணம் கேட்டு மிரட்டியதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இப்புகாரின் அடிப்டையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் சீனிவாசன் ஊட்டிக்கு சென்று விட்டதாகவும் குடும்பத்தில் சொத்து பிரச்சினை காரணமாக சென்று விட்டார் என்பதும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

#actor #powerstar #srinivasan #missing #policecomplaint  #annanagar #policestation #wife #julie

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: actor-power-star-srinivasan-is-missing, நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன். தமிழ்நாடு
-=-