சென்னை: 
டிகரும் இயக்குநருமான E.ராமதாஸ் மாரடைப்பு காரணமாக காலமானார்.

இயக்குனராக தமிழ் சினிமாவில் 1986 ஆம் ஆண்டு ஆயிரம் பூக்கள் மலரட்டும் என்ற படத்தில் அறிமுகமானார். ராஜா ராஜா தான், நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு, இராவணன், வாழ்க ஜனநாயகம், சுயம்வரம் ஆகிய படங்களை ராமதாஸ் இயக்கி உள்ளார். எழுத்தாளராக பல படங்களில் பணிபுரிந்த ராமதாஸ் நடிகராகவும் தமிழ் சினிமாவில் வலம் வந்தவர்.

வசூல் ராஜா MBBS, யுத்தம் செய், விக்ரம் வேதா, விசாரணை, தர்மதுரை, அறம், காக்கி சட்டை, மெட்ரோ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இவரது மகன் கலைச் செல்வன் தமது முகநூல் பக்கத்தில், ” எனது தந்தை திரு. E Ramdoss அவர்கள் இன்று இரவு MGM மருத்துவமனையில் மாரடைப்பால் இறைவனடி சேர்ந்தார். இறுதி சடங்குகள் 24/01/2023 காலை 11 மணி -மாலை 5 மணியளவில் 16/1078, முனுசாமி சாலை, கே. கே. நகர், அவரது இல்லத்தில் நடைபெற இருக்கிறது என்று வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன். – கலைச்செல்வன்.” என பதிவிட்டுள்ளார்.