ஆளில்லா விமானத்தை ஆஸ்திரேலியாவில் இயக்க தயாராகும் அஜித் தலைமையிலான மாணவர்கள் குழு

ஆளில்லா விமானத்தை இயக்கும் போட்டியில் பங்கேற்கும் அண்ணா பல்கலைக்கழக கல்லூரி மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கும் குழுவில் நடிகர் அஜித் இடம்பெற்றுள்ளார். விமானத்தை இயக்குவதில் சாகசம் செய்து வரும் அஜித் சிறிய ரக ட்ரோன் விமானத்தை வடிவமைக்கும் மாணவர்கள் குழுவிற்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ajith-project

திரைப்பட நடிகர் அஜித் நடிப்பது மட்டுமில்லாமல் விமானம் இயக்குவது, பைக் ரேஸ், புகைப்படம் எடுப்பது என பல துறைகளில் அசத்தி வருகிறார். இந்நிலையில் இந்திய அளவில் ஆளில்லா விமானத்தை இயக்கும் போட்டி நடைபெற உள்ளது. இதில் இந்திய சார்பில் 111 பொறியியல் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.

இதற்காக கடந்த மே மாதம் அண்ணா பல்கலைக்கழகத்தை சேர்ந்த மெட்ரய் இன்ஸ்டிடியூர் ஆஃப் டெக்னாலஜியில் படிக்கும் மாணவர்களுக்கு ஆளில்லா சிறிய ரக ட்ரோன் விமானத்தை வடிவமைக்கும் தக்‌ஷா மாணவர்கள் குழுவிற்கு ஆலோசகராக அஜித் நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் இருந்தப்படி எம்.ஐ.டி. மாணவர்களுக்கு அஜித் ஆலோசனை வழங்கினார். இவர்கள் தயாரித்த தக்‌ஷா என்ற ஆளில்லா விமானம் தரையிலிருந்து 15 அடி உயரத்தில் 6 மணி நேரம் 7 நிமிடம் 45 வினாடிகள் வரை நிலை நிறுத்தப்பட்டது.

ajith

இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் குவின்ஸ்லாந்தில், இம்மாதம் நடைப்பெற உள்ள ஆளில்லா விமானம் பறக்க விடும் போட்டியில், அஜித்தின் ஆலோசனை அளிக்கும் மாணவர் குழு தக்‌ஷா விமானத்தை பறக்க விட தயாராகி வருகினர். இந்த விமானம் 10 கிலோ எடையை சுமந்து பறக்கும் திறன் வாய்ந்தது என்பதால், இதை ‘ஏர் ஆம்புலன்ஸ்’ ஆக பயன்படுத்தலாம் என அஜித் ஆலோசனை வழங்கியுள்ளார்.

பல சாகசங்களை தக்‌ஷா படைத்து வருவதால் அஜித்துக்கு உரிய அங்கிகாரம் கிடைக்கும் வகையில் விருது வழங்க வலியுறுத்தப்பட்டு வருகின்றது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


-=-