சென்னை:

ள்ளிக்கல்வித்துறையில் 14 இணை இயக்குனர்களை மாற்றி செயலாளர் உதயசந்திரன் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

மேலும் தமிழகம் முழுவதும் பல சிஇஒக்களும் மாற்றப்பட்டுள்ளனர். அதைத்தொடர்ந்து ஒரே பள்ளியில் பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் அரசு பள்ளி ஆசிரியர்களும் மாற்றம் செய்யப்படுவார்களா என்று எதிர்ப்ர்ப்பு நிலவி வருகிறது.

தற்போது பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளவர்கள் விவரம்:

மேல்நிலைக்கல்வியின் லதா, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம். மாநில திட்ட இயக்ககத்தின் உஷாராணி, மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்ககம். மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் பாலமுருகன், மாநிலத் திட்ட இயக்ககம்,  அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் இணை இயக்குனர்-1 ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.. பணியாளர் தொகுதி சேதுராமவர்மா, மேல்நிலை அரசுத்தேர்வுகள். அரசுத்தேர்வுகள் இயக்ககம். மேல்நிலை உமா, பள்ளிக்கல்வி இயக்ககம் மேல்நிலை. தொடக்க கல்வி இயக்ககம் (நிர்வாகம்) சசிகலா, தொடக்க கல்வி இயக்கக (உதவி பெறுபவை).

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் கூடுதல் உறுப்பினர் செல்வராஜ், பள்ளி சாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்ககம். இணை இயக்குனர் (உதவி பெறுபவை) பள்ளிக்கல்வி இயக்ககம் சுகன்யா, பள்ளிக்கல்வி இயக்ககம்(தொழிற்கல்வி)க்கும், மாநில திட்ட இயக்ககம் நாகராஜமுருகன், தொடக்க கல்வி இயக்ககம்( நிர்வாகம்) நியமிக்கபட்டுள்ளனர்.

மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்கக தேவி, மாநில திட்ட இயக்ககம், அனைவருக்கும் கல்வி இயக்ககம் இணை இயக்குனர்-2 ஆக நியமிக்கப்பட்டுள்ளார். பள்ளிக்கல்வி இயக்ககம் (தொழிற்கல்வி) பாஸ்கரசேதுபதி, பள்ளிக்கல்வி இயக்ககம் (பணியாளர் தொகுதி)க்கு நியமிக்கப்பட்டுள்ளார். பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம் செல்வக்குமார், பள்ளிக்கல்வி கல்வி இயக்ககம்(நாட்டு நலப்பணித் திட்டம்) நியமிக்கப்பட்டுள்ளார்.

பள்ளிக்கல்வி கல்வி இயக்ககம்(நாட்டு நலப்பணித் திட்டம்) பொன்னையா, மாநில திட்ட இயக்ககம், அனைவருக்கும் கல்வி இயக்கககம் இணை இயக்குனர்-3 ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

அனைவருக்கும் கல்வித் திட்டம் இணை இயக்குனர் ஆனந்தி, ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதே போல் தமிழகம் முழுவதும் 25 சிஇஓக்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

தற்போது பெரும்பாலான ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றி வருகிறார்கள். அவர்களின் கல்வி தரமும் உயரவில்லை… அவர்களிடம் படிக்கும் மாணவர்களின் கல்வித்தரமும் உயரவில்லை.

ஒரே இடத்தில் பல ஆண்டுகளாக இதுபோல பணி புரியும் ஆசிரியர்களையும் அதிரடி மாற்றம்  செய்ய வேண்டும் என்று பொதுமக்களின் கருத்தாக உள்ளது.

நேர்மைக்கு பேர்போன உதயச்சந்திரன் இந்த விஷயத்தில் என்ன நடவடிக்கை எடுக்கிறார் என்று பார்க்கலாம்…