பெங்களூரு,

ர்நாடக பிரபல ரவுடி பாம் நாகா எனபவர் வீட்டில் இருந்து ரூ.120 கோடி அளவிலான பழைய 1000, 500 ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டன. இது கர்நாடக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூருவில் ஸ்ரீராமபுரா பகுதியில் பிரபல ரவுடி பாம் நாகா என்பவர் வீடு உள்ளது. இவர் முன்னாள் கவுன்சிலர். இவரது இயற்பெயர் நாகராஜ்.

பிரபல ரவுடியான நாகராஜ் மீது  45க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இவர் அரசியல்வாதிகளின் பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக தகவல்கள் வந்ததை தொடர்ந்து, இன்று அவரது வீட்டில் சோதனை நடத்த போலீசார் சென்றனர்.

ரவுடி பாம் நாகராஜ்

ஆனால், போலீசார் ரெய்டு நடத்த வருவதை அறிந்த நாகா, வீட்டை பூட்டிவிட்டு தலைமறை வானார்.

ஆனால், போலீசார் வீட்டை உடைத்து சோதனை நடத்த முடிவு செய்து, ஜன்னல் கம்பிகளை உடைத்து உள்ளே சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

சோதனையின் போது வீட்டிற்கு உள்ளே ரகசிய அறை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அறைக்குள் சென்று சோதனை செய்த போது ஏராளமான பேக்குகளில் செல்லாத 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அங்கிருந்த 110 கோடிக்கான பழைய நோட்டுக்களும், சுமார் 10 கோடி மதிப்பிலான நகைகளையும் கைப்பறினர்.

அதன் மொத்த மதிப்பு ரூ.120 கோடி என்றும், இந்த நோட்டுக்களை அரசியல்வாதி ஒருவருடன் இணைந்து  புதிய நோட்டுகளாக ‘பாம்’ நாகா மாற்ற முயற்சித்ததும் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து,  பாம் நாகாவையும், அவரது கூட்டாளிகளையும் போலீசார் தேடி வருகின்றனர்.

பாம் நாகா கர்நாடக காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் என கூறப்படுகிறது.

இது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.