பாஜக மூன்று மாநிலங்களில் வீழ்ச்சி அடையும் : கருத்துக் கணிப்பு

டில்லி

பிபி நியூஸ் நடத்திய கருத்துக் கணிப்பில் ராகஸ்தான்  சத்திஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தோல்வி அடையும் என தெரிய வந்துள்ளது.

தற்போது வட மாநிலங்களான ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் மற்றும் சத்திஸ்கர் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெற உள்ளன.   இந்த மாநிலங்களில் தேர்தல் நிலவரம் குறித்து ஏபிபி நியூஸ் மற்றும் சிவோட்டர் நிறுவனம் இணைந்து கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தி உள்ளது.   அந்த கணிப்பின் முடிவுகளைப் பற்றி இப்போது பார்ப்போம்.

ராஜஸ்தான் :

ராஜஸ்தான் மாநிலத்தில் 200 இடங்கள் உள்ளன.  இதில் கடந்த தேர்தலில் பாஜக 163 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 21 இடங்களிலும் மற்ற கட்சிகள் 16 இடங்களிலும் வெற்றி பெற்றன.   தற்போது இந்த கணக்கெடுப்பில் அது முழுமையாக மாறி உள்ளது.   பாஜகவுக்கு 57 இடங்களும், காங்கிரசுக்கு 130 இடங்களும் மற்ற கட்சிகளுக்கு 13 இடங்களும் கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்ற முறை பாஜகவுக்கு கிடைத்த 45.2% வாக்கு  வரும் தேர்தலில் 36.8% ஆக குறையலாம் எனவும் இதர கட்சிகளுக்கு 21.7% லிருந்து 12.4% ஆக குறையலாம் எனவும் கூறப்படுகிறது.   அதே நேரத்தில் காங்கிரசுக்கு 33.1% லிருந்து 50.8% ஆக அதிகரிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேசம்

மத்திய பிரதேச மாநிலத்தில் 230 இடங்கள் உள்ளன.  இதில் கடந்த தேர்தலில் பாஜக 165 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 58 இடங்களிலும் மற்ற கட்சிகள் 7 இடங்களிலும் வெற்றி பெற்றன.   தற்போது இந்த கணக்கெடுப்பில் அது மாறி உள்ளது.   பாஜகவுக்கு 106 இடங்களும், காங்கிரசுக்கு 117 இடங்களும் மற்ற கட்சிகளுக்கு அதே 7 இடங்களும் கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்ற முறை பாஜகவுக்கு கிடைத்த 44.9% வாக்கு  வரும் தேர்தலில் 40.1% ஆக குறையலாம் எனவும் இதர கட்சிகளுக்கு 18.7% லிருந்து 18.2% ஆக குறையலாம் எனவும் கூறப்படுகிறது.   அதே நேரத்தில் காங்கிரசுக்கு 36.4% லிருந்து 41.7% ஆக அதிகரிக்கலாம் என கூறப்பட்டுள்ளது

சத்தீஸ்கர்

சத்தீஸ்கர் மாநிலத்தில் 90 இடங்கள் உள்ளன.  இதில் கடந்த தேர்தலில் பாஜக 49 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 39 இடங்களிலும் மற்ற கட்சிகள் 2 இடங்களிலும் வெற்றி பெற்றன.   தற்போது இந்த கணக்கெடுப்பில் அது மாறி உள்ளது.   பாஜகவுக்கு 33 இடங்களும், காங்கிரசுக்கு 54 இடங்களும் மற்ற கட்சிகளுக்கு 3 இடங்களும் கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்ற முறை பாஜகவுக்கு கிடைத்த 41.0% வாக்கு  வரும் தேர்தலில் 38.8% ஆக குறையலாம் எனவும் இதர கட்சிகளுக்கு 18.7% லிருந்து 21.3% ஆக அதிகரிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.   அதே நேரத்தில் காங்கிரசுக்கு 40.3% லிருந்து 40% ஆக குறையலாம் என கூறப்பட்டுள்ளது

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: ABP news opinion polls predict that BJP may lose in 3 states assembly election
-=-