இயக்குநர் பிரித்வி ஆதித்யா இயக்கும் தடகள விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் படத்தில் விளையாட்டு வீரராக ஆதி நடித்து வருகிறார்.

இப்படத்தை பிஎம்எம் ஃபிலிம்ஸ் மற்றும் கட்ஸ் & குளோரி ஸ்டுடியோஸ் ஜி மனோஜ், ஜி ஸ்ரீஹர்ஷா ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். இது ‘தடகள’ விளையாட்டு உலகில் நடக்கும் கதை, தனது கனவுகளை நிறைவேற்ற கதாநாயகன் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றி பேசும் ஒரு படம்.” என்றார் பிரித்வி ஆதித்யா.

தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இப்படத்தில் நாயகியாக நடிக்க முன்னணி கதாநாயகி ஒருவருடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

பிரவீன்குமார் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ராகுல் படத்தொகுப்பு செய்ய, வைரபாலன் கலையை நிர்மாணிக்கிறார்.