வெளிநாட்டு நண்பரைக் கொன்ற இளைஞர் கைது

தஞ்சை மாவட்டம் மதுக்கூரில் பிரான்ஸ் நாட்டு பயணியை எரித்துக்கொன்ற ஆவி கோட்டை பகுதியை சேர்ந்த திருமுருகன் என்ற இளைஞர் கைது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அடுத்த ஆவி கோட்டை கிராமத்தை சேர்ந்த செல்லப்பாண்டி மகன் திருமுருகன். (வயது 29)

இவர், மாமல்லபுரத்தில் கல்லூரியில் படிக்கும் பொழுது வெளிநாட்டு சுற்றுலாப் பயணியான பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பியர் பாட்டர்  என்பவருக்கும் திருமுருகனுக்கு அறிமுகம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் நண்பர்களாக பழகிய இவர்கள்,  அடிக்கடி இணைந்து மது அருந்துவது வழக்கமாக இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் திருமுருகன் தனது சொந்த ஊரான ஆவிகோட்டையில் சென்ற நிலையில், கடந்த 5ஆம் தேதி திருச்சி வந்த பிரான்ஸ் நாட்டுப் சுற்றுலா பயணி பியர் பாட்டர் திருமுருகனுக்கு கால் செய்து தானும் திருமுருகனஅ ஊருக்கு வருவதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவரை சொந்த ஊருக்கு அழைத்து சென்றார் திருமுருகன். அங்கு இருவரும் சேர்ந்து ஒன்றாக சேர்ந்து மது அருந்தியுள்ளனர்

அப்போது இருவருக்கும் இடையே  வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் இருவரும் பரஸ்பரம் தாக்கிக்கொண்டனர், இதில் திருமுருகன் தள்ளிவிட்டதில் பியர் பாட்டர் மயங்கி விழுந்துவிட்டார்.   பயந்துபோன திருமுருகன், தன் வீட்டிலிருந்த பெட்ரோல் டீசல் எடுத்து அவர் மீது ஊற்றி எரித்து கொலை செய்ததோடு   அந்த சாம்பலை 3 மூட்டைகளில் கட்டி மதுக்கூர் அருகே உள்ள உக்கடை வாய்க்காலில் வீசிவிட்டார்.

இந்த நிலையில்   திருமுருகன் மதுக்கூர் காவல் நிலையத்திற்கு சென்று தான்  கொலை செய்துவிட்டதாக கூறி சரண் அடைந்துள்ளார்.

 

இதனையடுத்து  காவல்துறையினர் திருமுருகனை கைது செய்து சாம்பலை கைப்பற்றி தஞ்சை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும் கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

 

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: a-man-who-killed-a-foreign-man-was-arrested, வெளிநாட்டு நண்பரைக் கொன்ற இளைஞர் கைது
-=-