ரூ 50க்கு மேல் பார்க்காத எழுத்தாளருக்கு 40 ஆயிரம் தந்து திணறடித்தவர்..

=============================================================

பேர கேட்டவுடனே சும்மா அதிருதில் ல’ன்னு ’சிவாஜி’ படத்தில் ரஜினி வசனம் பேசுவார். அப்படி சொல்கிற அளவுக்கு நடிகர் டெல்லி கணேஷ் என்ற பெயரை கேட்டவுடன் நகைச் சுவையில் அதிரடி பட்டாசுகள் வெடிக்கும். இவர் டெல்லிக்காரராக இருப்பாரோ என்று பலருக்கு சந்தேக மும் இல்லாமல் இல்லை..
ஆனால் அவர் சாட்சாத் தமிழ்க்காரர். அதுவும் திருநெல்வேலிக்காரர்.
சுத்த, மூத்த தமிழ் நடிகர். வல்லநாட்டில் இதே ஆகஸ்ட் 1ம் தேதி 1944ம் ஆண்டு பிறந்தவர். இன்று அவருக்கு 76 வது பிறந்ததாள்.
சினிமாவுக்கு வருவதற்கு முன் நாடகங் களில், டிவிக்களில் நடித்து வந்தார். தக்‌ஷிண பாரத சபா என்ற நாடக சபா நடத்தி வந்தார். டெல்லி சென்று விமானப்படையில் 10 வருடம் வேலைப்பார்த்தார். டெல்லி நாடக குழுவில் ஒரு உறுப்பினராக இருந்தார். கணேஷாக பிறந்தவர் இதன்பிறகு டெல்லி கணேஷ் ஆனார்.

 

1977 ம் ஆண்டு கே.பாலசந்தர் இயக்கிய ’பட்டினப்பிரவேசம்’ படம் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். இப்படத்தில் கிராமத்தில் சொத்துக் களை இழந்த குடும்பம் பிழைப்பு தேடி சென்னை வந்து, இருக்கும் கவுரவத்தை யும் இழந்து மீண்டும் கிராமத்துக்கே திரும்புவதாக அமைக்கப்பட்டது. அதில் டெல்லி கணேஷுடன் காத்தாடி ராமமூர்த்தி, சிவச்சந்திரன் என பல நடிகர்கள் நடித்திருப்பார்கள். யாருடனும் எளிதில் பழகும் பண்பு கொண்டவர் டெல்லி கணேஷ். இனிமையாக பேசுவார்.


சினிமாவுக்கு வருவதற்கு முன்பு தமிழ் வானொலி, தொலைக்காட்சிகளில் நடித்து வந்தார். ஒருமுறை கரிச்சான் குஞ்சு என்ற எழுத்தாளாரைப்பற்றி பாராட்டி பேச இவரை கும்பகோணத் துக்கு அழைத்தார்கள். கரிச்சான் குஞ்சு பற்றி இவருக்கு பெரிதாக ஒன்றும் தெரியாது என்பதால் அவரை பற்றி பலரிடம் விசாரித்தார்.
‘அவர் நல்ல எழுத்தாளர் ஆனால் அவரைப்பற்றி முழுவிவரம் தெரியாதே.. என்றுதான் பலரும் உதட்டை பிதுக்கினார்கள்.
என்ன செய்வது என்று தெரியாமல் நாளை அவரை எப்படி பாராட்டி பேசுவது என்று புரியாமல் தவித்தார் டெல்லி கணேஷ். மறுநாள் கும்ப கோணம் போக வேண்டிய நிலையில் முதல் நாள் மாலையில் வாத்தியார் ராமன் நாடகம் ஒன்று ராணி சீதை அரங்கில் நடந்தது. அதில் கலந்துகொண் டார். நாடகத்தை பார்த்துவிட்டு அங்கிருந்தவரிடம் புகழ்ந்துக்கொண்டி ருந்தபோது அதைகேட்டவர் ‘இதென்னங்க பிரமாதம் கரிச்சான் குஞ்சு என்ற எழுத்தாளர் எழுதுவதை படித்துப்பாருங்கள் என்று கூற டெல்லி கணேஷுக்கு ஒரே ஷாக்..


’கரிச்சான் குஞ்சா.. அவரை உங்களுக்கு தெரியுமா?’ என்றதும் அந்த நபரோ ’தெரியுமாவா? நான் அவரோட மாணவர்’ என்றதும் கணேஷுக்கு ஒரே மகிழ்ச்சி அவரிடமே கரிச்சான் குஞ்சு வாழ்க்கை பற்றிய விவரங்களை சேகரித் துக்கொண்டு மறுநாள் கும்பகோணம் சென்று மேடையில் அவரைப்பற்றி விரிவாக பேசி அங்கிருந்தவர்களை அசர வைத்தார் டெல்லி கணேஷ்.
கரிசான் குஞ்சுவின் திறமையை உணர்ந்து கொண்ட டெல்லி கணேஷ். அவரிடம் ’எனக்கு ஒரு கதை எழுதி கொடுங்கள் அதை தூர்தர்ஷனில் நாடகமாக போடுகிறேன்’ என்றார். அவரும் எழுதி கொடுக்க சம்மதித்தார்.
நாடக காட்சிகளை போஸ்ட் கார்டில் எழுதி அனுப்பினார் கரிச்சான் குஞ்சு.. அதை நாடகமாக்கினார் டெல்லி கணேஷ்.
ஒருநாள் டெல்லி கணேஷிடன், ’நான் உயிரோடு இருப்பதற்குள் இந்த நாடகத்தை பார்க்க முடியுமா?’ என்று கேட்க கரிச்சான் குஞ்சு கேட்க
‘அது தெரியாது.. இது தூர்ர்ர்ர்தர்ஷன்
ரொம்ப தூரத்தில் இருக்கிறது. அவர்கள் போடும்போது பார்க்க வேண்டியது தான்’ என்றார் டெல்லி கணேஷ். கரிசான் குஞ்சு நினைத்ததுபோலவே அவர் இறந்து பிறகுதான் அந்த நாடகம் ஒளிபரப்பானது. அதற்கு சன்மானமாக ரூ 40 ஆயிரம் கிடைத்தது. அதை எடுத்துக்கொண்டுபோய் கரிசான் குஞ்சு மனைவியிடம் டெல்லி கணேஷ் கொடுத்தார்.
அதை வாங்கிக்கொண்டு கண்கலங்கிய கரிச்சான் குஞ்சு மனைவி, ’இதுவரை இவர் எழுத்திற்கு 50 ரூபாய்க்கு மேல் யாரும் தந்ததில்லை, நீங்கள் 40 ஆயிரம் தருகிறீர்களே. என்னைவிட நீங்கள் வயதில் மூத்தவராக இருந்திருந்தால் உன்கள் காலில் விழுந்திருப்பேன்’ என கரிசான் மனைவி சொல்ல அதைக் கேட்டு டெல்லி கணேஷ் நெகிழ்ச்சியில் உடல் சிலிர்த்துப் போனார். இந்த சம்வத்தை ஒரு மேடை யில் டெல்லி கணேசே கூறினார்.
டெல்லி கணேஷ் இதுவரை 600 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். ரஜினி. கமல் என எல்லா முன்னணி, இளம் நடிகர்கள் படங்களிலும் நடித்தி ருக்கிறார். அவர்களில் கமலுடன் நடிக்கும்போது அவர்கள் இருவருக்கும் இருக்கும் நெருக்கும் அவர்களுக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே தெரியும்.

பல நேரம் கமலும், டெல்லி கணேஷும் ‘ஏ’ ஜோக்குகள் பரிமாறிக்கொள் வார்கள்.
’மைக்கல் மதன காமராஜன்’ படத்தில் சமையல்காராராக நடித்திருப்பார் டெல்லி கணேஷ். அவரது மகனாக கமல் நடித்திருப்பார். சமையல் செய்யும் காட்சி வரும்போது அசல் சமையல் காரராகவே மாறிவிடுவார் டெல்லி கணேஷ்.
அபூர்வ சகோதரர்கள் படத்தில் வில்லன் வேடமும் போட்டிருக்கிறார் டெல்லி கணேஷ். இன்னும் சிந்து பைரவி, தெனாலி, ஆஹா, நாயகன். ஸ்ரீராக வேந்திரா, சிதம்பர ரகசியம், வேலைக் காரன். உன்னால் முடியும்தம்பி. தவசி, தமிழன், லண்டன், காவலன் என ஏராள மான படங்கள் இவரது நகைச்சுவைக்கு உதாரணம் கூற முடியும் .
குணசித்ர நடிகர்களில் எப்போதோ இவருக்கு தேசிய விருது கிடைத்திருக்க வேண்டும். ஆனால் அந்த விருதுக் குழு என்னவோ இன்னும் இவரை பாரா முகமாகவே இருக்கிறது
முதலமைச்சரராக இருந்த எம்.ஜி. ஆரிட டம் இருந்து பசி (1979) திரைப்படத்துக் காக “தமிழ்நாடு மாநில அரசு சிறந்த நடிகருக்கான விருதினைப் பெற்றார்.
டெல்லி கணேஷ்.
முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவிடம் இருந்து தமிழ்நாடு மாநில அரசின் 1993 – 1994 ஆம் ஆண்டிற்கான “கலைமாமணி” விருது பெற்றார்.
டெல்லி கணேஷ் ’என்னுள் ஆயிரம்’ என்ற சொந்த படத்தையும் தயாரித்திருக்கிறார். அந்த  விழாவில் கமல்ஹாசன் பங்கேற்று வாழ்த்தினார்.

டெல்லி கணேஷின் 76வது பிறந்தாளில் பத்திரிகை டாட் காம் இதயம் கனிந்த பிறந்த நாளை தெரிவித்துக்கொள்கிறது