கிருஷ்ணகிரி: தேன்கனிக்கோட்டை – அஞ்செட்டி சாலையை மீண்டும் அதே வழியில்80 யானைகள் கொண்ட யானைகள் கூட்டம்  கடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சானமாவு வனப்பகுதியில் அவ்வப்போது யானைகள் கூட்டம் வந்து செல்வது வாடிக்கையாக உள்ளது. ஆனால் ஒவ்வொரு முறையும், வனத்துறையினர் வெடி வெடித்த, 80 யானைகள் கொண்ட கூட்டத்தை, விரட்டியடித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சமீபத்தில், அவ்வாறு வந்த யானைகள் கூட்டம் விரட்டியடிக்கப்பட்டது. இந்த யானைகள் கூட்டம்,  சினிகிரிப்பள்ளி வழியாக தேன்கனிக் கோட்டை கஸ்பா காட்டில் தஞ்சமடைந்தது. இதனால் தென்கனிக்கோட்டை பகுதிவிவசாயிகள் சற்றே நிம்மதி அடைந்தனர்.

இந்த நிலையில்,  யானைகளை நேற்று மதியம்  அங்கிருந்து, ஜவளகிரி காட்டிற்கு விரட்ட வனத்துறை மேற்கொண்டனர். இதனால் கலைந்து சென்ற யானைகள் அந்த பகுதியில் சுற்றித்திரிநதனர். இதையடுத்து,  நேற்று இரவு 11.40 மணியளவில் தேன்கனிக்கோட்டை அருகே கொத்தூர் கிராமத்தை ஒட்டி தேன்கனிக்கோட்டை – அஞ்செட்டி சாலையை கடந்து தாவரக்கரை காட்டிற்கு 80 யானைகள் சென்றன.

ஆனால், சென்ற வேகத்தில் இன்று அதிகாலை அதே வழியில் திரும்பிய யானைகள் ஆலஹள்ளி காட்டிற்கு சென்றன. இன்று அஞ்செட்டி சாலையை கடக்க வைத்து தின்னூர் முள் பிளாட் வழியாக ஜவளகிரி காட்டிற்கு விரட்ட வனத்துறை தீவிரம் காட்டி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.