பயணிகள் விமான லக்கேஜ் அறையில் அடைக்கப்பட்ட ஊழியர் பத்திரமாக மீட்பு

Must read

வாஷிங்டன்:

பயணிகள் விமான லக்கேஜ் அறையில் வைத்து பூட்டிய ஊழியர் பத்திரமாக மீட்கப்பட்டார்.


வடக்கு கரோலினாவில் இருந்து வாஷிங்டன்னுக் பறந்து சென்ற பயணிகள் விமானத்தின் லக்கேஜ் அறையில் ஒரு ஊழியர் ஒருவர் அடைபட்டு கிடந்தார்.
பயணிகளின் பை, பெட்டிகளையும் கையாளும் அந்த ஊழியர் யுனைடெட் எக்ஸ்பிரஸ் 6060 என்ற பயணிகள் விமானத்தின் லக்கேஜ் அறையில் வைத்து எப்படி பூட்டப்பட்டார் என்பது வியப்பாக இருக்கிறது என்று அந்த விமான நிறுவன செய்தி தொடர்பாளர் எரின் பென்சன் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன் துலேஸ் சர்வதேச விமான நிலையத்தில் அந்த விமானம் தரையிறங்கியவுடன் அந்த ஊழியர் காயங்கள் ஏதும் இன்றி பத்திரமாக மீட்கப்ப்டா£ர். அந்த முழு விமானத்துக்கும் ஒரு லக்கேஜ் அறை அது என்பது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article