நெடுவாசல்,

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசல் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்தக்கூடாது என அந்த பகுதியை சேர்ந்த 87 கிராமங்கள் பங்கேற்ற கிராம சபை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏப்ரல் 6ந்தேதி அடுக்கக்கட்ட முடிவு குறித்து அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து  20 நாட்களுக்கு மேலாக போராடினர்.  அவர்களுக்கு ஆதரவு தமிழகம் முழுவதும் இளைஞர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

 

இந்நிலையில் தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர், இத்திட்டத்துக்கு தமிழக அரசு சுற்றுசூழல் துறை அனுமதி அளிக்காது என்று  உறுதி அளித்ததின் பேரிலும், மாணவர்களின் தேர்வு காலம் நெருங்கியதை கருதியும் தற்காலிகமாக போராட்டத்தை ஒத்தி வைத்தனர்.

இந்நிலையில், கடந்த வாரம் மத்திய பெட்ரோலிய துறையுடன் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்தன. இதில் தமிழகத்தில் நெடுவாசல்,  பாண்டிச்சேரி அருகே உள்ள காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இதன் காரணமாக, நெடுவாசலில் மீண்டும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இந்நிலியில் நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த கூடாது என கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரசால் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை மீட்டு மக்களிடம் கொடுக்க வேண்டும் எனவும், ஆழ்துளை கிணறுகளை அகற்றவும் நெடுவாசல் கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அவர்களுக்கு ஆதரவாக 87 கிராமை சபையில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதில்,  நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த விடமாட்டோம். இதனை மீறி செயல்படுத்த முயற்சித்தால் நெடுவாசல் பகுதியில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளை கொன்றுவிட்டுதான் செயல்படுத்த முடியும். சாகும் வரை போராட்டம் நடத்துவோம் என்று அந்த பகுதி கிராம மக்கள் கூறி உள்ளனர்.