சென்னை: நாட்டின் 74குடியரசு தினத்தையொட்டி சென்னை கடற்கரையில் நடைபெற்ற அணிவகுப்பு நிகழ்ச்சியில்  வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

முன்னதாக காலை 7.52 மணிக்கு விழா பகுதிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்தார். அவரின் காரின் முன்னும் பின்னும் போலீசாரின் மோட்டார் சைக்கிள்கள் புடைசூழ அழைத்து வரப்பட்டார். காலை 7.54 மணிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி வருகை தந்தார். அதைத்தொடர்ந்து 7.58 மணிக்கு அணி வணக்கம் ஏற்கும் மேடைக்கு அருகே வந்த கவர்னர் ஆர்.என்.ரவியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பசுமை கூடை வழங்கி வரவேற்றார்.

பின்னர் அதிகாரிகளை கவர்னருக்கு சம்பிரதாயப்படி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார். இந்த நிலையில் காலை 8 மணிக்கு அங்கிருக்கும் கம்பத்தில் தேசிய கொடியை கவர்னர் ஆர்.என்.ரவி ஏற்றி வைத்தார்.

அப்போது அந்த பகுதியின் மேல் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் பறந்து வந்து மலர் தூவியது. தொடர்ந்து ராணுவ படை பிரிவு, கடற்படை பிரிவு, ராணுவ கூட்டுக்குழல் முரசிசை பிரிவு, வான்படை பிரிவினர் அணிவகுத்து வந்து கவர்னருக்கு வணக்கம் செலுத்தி வருகின்றனர். அதை அவர் ஏற்று வருகிறார்.

குடியரசு தினத்தையொட்டி சென்னை கடற்கரையில் நடைபெற்று வரும் நிகர்ச்சியில், ஆளுநர் ஆர்.என். ரவி தேசிய கொடியை ஏற்றினார். அதைத்தொடர்ந்து முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. தொடர்ந்து,  வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கங்களை 5 பேருக்கு தமிழக முதலமைச்சர் மு.க..ஸ்டாலின் வழங்கினார்.

அதன்படி, சென்னை தலைமை காவலர் சரவணன், வேலூர் செவிலியர் ஜெயக்குமார் பொன்னரசு, தூத்துக்குடி அந்தோணிசாமி, கன்னியாகுமரி ஶ்ரீ கிருஷ்ணன், தஞ்சை செல்வம் ஆகியோருக்கு அண்ணா பதக்கம் வழங்கங்பபட்டது.

சிறந்த காவல் நிலையத்துக்கான முதல்-அமைச்சர் விருது 3 காவல் நிலையங்களுக்கு வழங்கினார். அதன்படி முதல்பரிசு திருப்பூர் வடக்கு காவல் நிலையத் துக்கும், 2வது பரிசு , திருச்சிகோட்டை காவல் நிலையத்துக்கும், 3வது பரிசு  திண்டுக்கல் வட்ட காவல் நிலையத்துக்கும் வழங்கப்பட்டது.

காந்தியடிகள் காவலர் பதக்கங்களை, சென்னை நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர் பிரியதர்ஷினி, தஞ்சை மதுவிலக்கு ஆய்வாளர் ஜெயமோகன், சேலம், விழுப்புரம் நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆய்வாளர்கள் சகாதேவன், இனாயத் பாஷா, செங்கல்பட்டு அயல்பணி நுண்ணறிவு பிரிவு தலைமை காவலர் சிவனேசன் ஆகியோர் பெற்றனர்.

 புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த வசந்தாவுக்க வேளாண்மை துறை சிறப்பு விருது வழங்கப்பட்டது.