மின்தடைக்கு முன்னோட்டமா? சென்னையில் இன்று 7 மணி நேரம் ‘பவர்கட்’

சென்னை:

மின்மிகை மாநிலம் என அறிவிக்கப்பட்டுள்ள தமிழகத்தின் தலைநகர் சென்னையில்  இன்று 7 மணி நேரம் மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையின் பிரதான பகுதியான செம்பியம், வியாசர்பாடி பகுதிகளில் 7 மணி நேரம் மின்தடை என அரசு கூறி உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக பராமரிப்பு பணிக்காக 4 மணி நேரம் மட்டுமே மின்தடை  அறிவிக்கப்பட்டு வரும்  நிலையில், தற்போது 7 மணி நேரம் மின்தடை என்று தமிழக மின்வாரியம் அறிவித்திருப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான  போரூர், திருவேற்காடு, வியாசர்பாடி, செம்பியம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்சார தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்து உள்ளது.

வியாபர்பாடி: (மின்தடை ஏற்படும் பகுதிகள்)

தெற்கு டெலிபோன் காலனி, வடக்கு டெலிபோன் காலனி, பத்மாவதி நகர், மெஜஸ்டிக் அவென்யூ, வேணு நகர், பெருமாள் கோவில் தெரு, மந்தவெளி, வெங்கடேஷ்வரா நகர், தெலுங்கு காலனி, ஏவிஎம் நகர, வசந்தம் அவென்யூ, ரமணா அவென்யூ, கணேஷ் நகர், ராமச்சந்திரா நகர்.

செம்பியம்: (மின்தடை ஏற்படும் பகுதிகள்)

பத்மாவதி நகர், லஷ்மி காந்தம்மாள் நகர், லட்சுமி நகர், ஆர்.சி. பிளாட்ஸ், திருமால் நகர், விஜயலட்சுமி நகர், சூரப்பேட்,  வேல்முருகன் நகர், கிரேஸ் நகர், காமராஜ்நகர் விரிவு.

மற்றும் போரூர், திருவேற்காடு பகுதிகளிலும் இன்று மின் தடை  என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

சமீப காலமாக சென்னை உள்பட பல பகுதிகளில் மின்சாரம் ஒழுங்கற்று, ஏறி இறங்கியும், அவ்வப்போது மின்தடையும் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக சென்னைவாசிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

இந்த நிலையில்  மின் தடை நேரம் அதிகமாக்கப்பட்டிருப்பதால், தமிழகத்தில் மீண்டும் மின்தடை ஏற்படுமோ என்றும், அதற்கான முன்னோட்டமாக இருக்குமோ என்று பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: 7-hour power cut in Chennai today, மின்தடைக்கு முன்னோட்டமா? சென்னையில் இன்று 7 மணி நேரம் 'பவர்கட்'
-=-