சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் 6 ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக சென்று மரியாதை செலுத்தினார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 6 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி,  மெரினாவில் அமைந்துள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி பழனிச்சாமை,  ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் தனித்தனியே மரியாதை செலுத்தி வருகின்றனர். மேலும், பல அதிமுகவினர் உட்பட ஏராளமானோர் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இன்று காலை 9மணி அளவில்  எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவு முன்னாள் அமைச்சர்களுடன் வந்து மரியாதை செலுத்திவிட்டு தொண்டர்களுடன் உறுதிமொழி எடுத்துவிட்டு சென்றார்.

அதைத்தொடர்ந்து,  ஜெயலலிதா நினைவிடத்திற்கு  ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில்  இருந்து பேரணியாக சென்று இன்று காலை ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் ஓபிஎஸ். அருங்காட்சியகம் அருகில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் நின்றபடி ஓபிஎஸ் உறுதி மொழி எடுத்துக் கொண்டார். இதில் வைத்தியலிங்கம், மனோஜ்பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர், மாவட்ட தலைவர்கள் சைதை எம்.எம்.பாபு, ரெட்சன் அம்பிகாபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதற்கிடையே, போயஸ் கார்டனில் ஜெயலலிதா வாழ்ந்த வீட்டில் ஜெ. தீபா ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவித்து விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினார்.

ஜெ.நினைவு தினத்தையொட்டி, சென்னை மெரினாவில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.