63 நாட்கள் சித்திரவதை: போலீஸார் மீது பரபரப்புப் புகார்

Must read

 
மாவட்ட செய்திகள்       
மதுரை:  விசாரணைக்காக அழைத்துச் சென்று  சித்திரவதை செய்ததாக, கன்னியாகுமரி மாவட்ட போலீஸார் மீது தொழிலாளர் குடும்பத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.
police_torture_yahoo_boy_to_death
       மக்கள் கண்காணிப்பகம் என்ற அமைப்பு சார்பில், மதுரை உயர் நீதிமன்றத்தில் ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.,
மதுரை மாவட்டம், விளாச்சேரி பகுதியிலுள்ள சாணை பிடிக்கும் தொழிலாளர்கள்  14 பேர், கன்னியாகுமரி மண்டைக்காடு பகுதிக்கு 2 மாதங்களுக்கு  முன்பு வேலைக்குச் சென்றனர்.  ஆண்கள் ஊர் ஊராகச் சென்று சாணை பிடிக்கும் தொழிலிலும், பெண்கள் அம்மி, உரல் கொத்தும் தொழிலிலும் ஈடுபட்டு வந்தனர்.
போலீஸார், விசாரணைக்கு எனக் கூறி  14 பேரையும் ஒரு மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர். பின்னர், தக்கலை காவல் நிலையம் அருகே உள்ள ஒரு பழைய கட்டடத்தில் அடைத்து வைத்து சித்திரவதை செய்தனர். எந்த குற்றச் செயலிலும் ஈடுபடாத எங்களை,  திருடிய நகைகளை எங்கே உள்ளது என  கேட்டு கொடுமைப்படுத்தினர். கடந்த 63 நாட்களாக நாங்கள் கொடுமைபடுத்தப்பட்டோம்.
மக்கள் கண்காணிப்பகம் முலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் நாங்கள் விடுவிக்கப்பட்டோம் என்று பாதிக்கப்பட்டவர்கள் கூறினர்.

More articles

Latest article