டில்லி:

இந்தியாவில் 10 முதல் 14 வயது வரையிலான 6.25 லட்சம் சிறார்கள் புகையிலை சிகரெட் பிடிப்பதாக குளோபல் டொபாகோ அட்லஸ் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் கேனசர் சொசைட்டி மற்றும் அமெரிக்காவில் உள்ள விட்டல் ஸ்டிரேடஜிஸ் ஆகியவை இணைந்து தயாரித்த டொபாகோ அட்லஸ் புள்ளி விபரங்கள் கடந்த வாரம் வெளியிடப்பட்டது.

இதில், ஆண்டுதோறும் 9 லட்சத்து 32 ஆயிரத்து 600 சிறார்கள் புகையிலை பயன்படுத்தி அது தொடர்பான நோய்களுக்கு ஆட்பட்டு உயிரை விடுகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்தில் மட்டும் 17 ஆயிரத்து 887 பேர் இதனால் இறந்துள்ளனர். 15 வயதுக்கு மேற்பட்ட 10.30 கோடி பேர் தினமும் புகைபிடிக்கின்றனர்.

இந்தியாவில் புகையிலை பொருளாதாரத்தில் மதிப்பு 18 லட்சத்து 18 ஆயிரத்து 691 மில்லியனாகும். சிறிய வயதில் உயிரிழப்பு, நோய் தாக்குதல் போன்வற்றின் மூலம் ஏற்படும் மறைமுக செலவு, சுகாதாரம் மூலம் ஏற்படும் நேரடி செலவும் இதில் அடக்கம்.

இந்தியாவில் 4 லட்சத்து 29 ஆயிரத்து 500 சிறுவர்கள், ஒரு லட்சத்து 95 ஆயிரத்து 500 சிறுமியர்கள் தினமும் புகைப்பிடிக்கின்றனர். பெண்களை விட ஆண்கள் அதிகளவில் புகைப்பிடிக்கின்றனர். 9 கோடி பெண்களும், 1.30 கோடி ஆண்களும் புகைப்பிடிக்கின்றனர். 17.10 கோடி பேர் சிகரெட் அல்லாத வகையில் புகையிலையை பயன்படுத்துகின்றனர்.

இது வாய், தொண்டை புற்றுநோயை உருவாக்கும். 2016ம் ஆண்டில் உலகில் உள்ள 6 பெரிய சிகரெட் நிறுவனங்களின் மொத்த வருவாய் 346 பில்லியன் டாலர். இது இந்தியாவின் மொத்த தேசிய வருவாயில் 15 சதவீதமாகும். 2016ம் ஆண்டில் இந்தியாவில் 82.12 பில்லியன் சிகரெட்கள் தயாரிக்கப்பட் டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.