டில்லி,
ருப்பு பணத்தை ஒழிப்பு, ஏழைமக்கள் முன்னேற்றம் இதற்காகவே மத்திய பாரதிய ஜனதா அரசு பாடுபடுவதாக மோடி தெரிவித்ததார்.
நேற்று இரவு முதல் அதிரடியாக  500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். அவரது இந்த அறிவிப்பு நாட்டு மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த தீடீர் அறிவிப்பால் நடுத்தர வர்க்கத்தினர், ஏழை மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.
new-currency
இதற்கிடையில் நேற்று, மத்திய அமைச்சரவை கூட்டம் நிறைவடைந்த பிறகு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
அப்போது, அவர்  நாட்டு மக்களுடன் பல முக்கியமான சில விஷயங்களை பகிர்ந்து கொள்ள விரும்புவதாக மோடி தெரிவித்தார்.
உலக பொருளாதாரத்தில் இந்தியா முக்கிய பங்கு வகிப்பதாக சர்வதேவ செலவாணி நிதியம் பாராட்டு தெரிவித்து உள்ளதாக மோடி தெரிவித்தார்.
ஏழை மக்களின் முன்னேற்றத்துக்காகவே தமது அரசு அர்ப்பணிப்புடன் பாடுபடுவதாக தெரிவித்த மோடி, அனை வரையும் உள்ளடக்கிய வளர்ச்சியே தமது அரசின் இலக்காகும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
மேலும் ஊழலும், கருப்பு பணமும் நாட்டின் உறுதி நிலையை சீர்குலைப்பதாக மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.
வறுமையை ஒழிப்பதே தமது அரசின் குறிக்கோள் என்றும், வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மோடி தெரிவித்தார்.
1.25 லட்சம் கோடி கருப்பு பணம் மீட்கப்பட்டுள்ளதாகவும் மோடி தெரிவித்தார்.
எல்லைக்கு அப்பால் உள்ளவர்கள் தீவிரவாதிகளுக்கு பண உதவி அளித்து வருவதாகவும்,  பயங்கரவாதிகளுக்கு கொடுக்க எதிரிகள் கள்ள நோட்டுகளை அச்சிடுவதாகவும், பாகிஸ்தானை பிரதமர் மோடி மறைமுகமாக சாடினார்.
தவறுகளை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகிறது என மோடி தெரிவித்தார்.
பொதுமக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம். அரசு அறிவித்தபடி வங்கிகளில் ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம். மற்ற ரூபாய் நோட்டுகள் செல்லும்’ என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.