புனே

க்ஸ்ஃபோர்ட் பலகலைக்கழகம் கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பூசியை தயாரிக்க உள்ள சிரம் இன்ஸ்டிடியூட் தலைவர் அது குறித்து பேட்டி அளித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்க அனைத்து உலக நாடுகளும் முயற்சி செய்து வருகின்றன.  இதில் ஆக்ஸ்ஃபோர்ட் பகலைக்கழகம் கண்டுபிடித்துள்ள தடுப்பூசி மனித சோதனையில் வெற்றி பெற்றுள்ள முதல் தடுப்பு மருந்து ஆகும்.  இந்த மருந்தை இந்தியாவில் தயாரிக்க உலகின் மிகப் பெரிய தடுப்பு மருந்து நிறுவனமான சிரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா உரிமம் பெற்றுள்ளது.

இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அதார் பூனாவாலா ஒரு ஊடகத்துக்குப் பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில்,”கொரோனா தடுப்பூசி சோதனைகள் நன்கு நடந்து  முடிவுகள் வெற்றிகரமாக வந்தால் ஆக்ஸ்ஃபோர்ட் பலகலைக்கழக கூட்டு நிறுவனம் என்னும் முறையில் சிரம் இன்ஸ்டிடியுட் அதைத் தயாரிக்க இருந்தது. அதன்படி நாங்கள்   இந்த சோதனையின் முடிவுகள் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறோம்  அதன் பிறகு இந்த மருந்தின் மொத்த உற்பத்தியைத் தொடங்க உள்ளோம்.

உற்பத்தி செய்யப்படும் தடுப்பு மருந்துகளில் 50% இந்தியாவுக்கு வழங்க ஒப்புக் கொண்டுள்ளோம்.  மீதமுள்ள 50% மற்ற நாடுகளுக்கு ஒவ்வொரு மாதமும் விகிதாச்சார அடிப்படையில் அனுப்பப்படும்.   உலக அளவில் தற்போதுள்ள நெருக்கடியையும் மக்கள் அனைவரும் காக்கவேண்டும் என்பதையும் நாங்கள் அறிந்துள்ளோம்.  உலகம் முழுவதுமே இந்த மருந்து அனுப்பப்படுவது அவசியமாகும்.

சோதனைகள் மற்றும் முடிவுகள் திட்டமிட்டபடி நடப்பதால் சிரம் இன்ஸ்டிட்யூட் ஒரு சில லட்சம் டோஸ் மருந்துகளை வரும் நவம்பர் அல்லது டிசம்பருக்குள் உற்பத்தி செய்யும்.  அதன் பிறகு 2021 ஆம் வருட முதல் காலாண்டுக்குள் 30 முதல் 40 லட்சம் டோஸ்கள் தயாரிக்கப்படும்.  இந்த மருந்தின் முதல் கட்டதாயாரிப்புக்களை யாருக்கு அளிப்பது என்பதை அரசு முடிவு செய்யும்.

தடுப்பு மருந்தைச் அளிக்கும் சரியான முறைப்படி முதலில் முதியோர் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவால் பாதிப்பு உண்டாக அதிகம் வாய்ப்புடையோர், அத்துடன் முன்னணி சுகாதார ஊழியர்களுக்குத் தடுப்பு மருந்து அளிக்க வேண்டும்.  நல்ல உடல் நிலையில் உள்ளோருக்கு அதன்  பிறகு அளிக்க வேண்டும்.

இந்த மருந்து என்ன விலையில் இருக்கும் என்பதை இப்போது சொல்ல ,முடியாது.   ஆனால் விலை அதிகமாக இருக்காது என்பதை மட்டுமே சொல்ல முடியும்.  தற்போது கொரோனா பரிசோதனைக்கு ரூ.2500 ஆகிறது. ரெம்டெசிவிர் போன்ற மருந்துகளுக்கான செலவு பத்தாயிரக்கணக்கான ரூபாய்களாக உள்ளன.  நாங்கள் இந்த மருந்தின் விலையை ஒரு டோசுக்கு ரூ.1000 அல்லது அதற்கும் குறைவான விலையில் அளிக்கத் திட்டமிட்டுள்ளோம்.

ஆப்பிரிக்க நாடுகளுக்கு இந்த மருந்தை ஒரு டோஸ் 2.3$ என்னும் விலையில் அளிக்க நிறுவனம் ஒப்பந்தம் இட்டுள்ளது.

எங்கள் நிறுவனம் இந்த மருந்தைக் குறைவான விலைக்கு விற்கவே உத்தேசித்துள்ளோம். இந்த கொள்ளை நோய் பரவும் காலத்தில் இதை வைத்து நாங்கள் லாபம் சம்பாதிக்க எண்ணவில்லை.   இந்த பரவுதல் முடிந்த பிறகு நாங்கள் இந்த மருந்தை ஒரு நல்ல விலை வைத்து தனியார் மருந்துக்கடைகளில் மற்ற மருந்துகளைப் போல் விற்பனை செய்ய எண்ணி உள்ளோம். தற்போதைய சூழ்நிலையில் நாக்கள் அதிக விலை வைக்க மாட்டோம் என உறுதி அளிக்கிறோம்.

இந்த செலவு பொது மக்களுக்கு இருக்காது என நான் எண்ணுகிறேன். ஏனெனில் இந்த மருந்தை அரசு மொத்தமாக வாங்கி அதைத் தடுப்பூசி மையங்கள்  மூலம் பொதுமக்களுக்கு இலவசமாக வழக்க உத்தேசித்துள்ளது.

எந்த ஒரு குடிமகனும் இந்த தடுப்பூசிக்காக எதுவும் செலவு செய்யக்கூடாது என்பதே எனது எண்ணமாகும்.  தற்போதைய கொரோனா வைரஸ் பரவும் கால கட்டத்தில் இது ஒரு தேசிய பிரச்சினையாக உள்ளது.  எனவே இதைத் தவிர்க்க அரசு தனது முழு முயற்சியையும் செய்ய வேண்டும்.  அரசும் அதைச் செய்து வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.