சீனாவில் 47ஆயிரம் 3டி திரைகளில் வெளியாகிறது ரஜினியின் 2.O: லைகா அறிவிப்பு

பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்சய் குமார், எமி ஜாக்சன் நடித்துள்ள பிரமாண்ட 3டி படம் 2.0. இந்த படத்தில் நாடு முழுவதும் வெளியாகி வசூலை வாரி குவித்து வருகிறது. இந்த நிலையில் அடுத்த ஆண்டு சீனாவில் வெளியிட இருப்பதாக லைகா அறிவித்து உள்ளது.

ஷங்கரின் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவான 2.0 படத்தில் ரஜினி, அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். 3டி தொழில்நுட்பம், 4டி ஒலி நுட்பம் என உலக சினிமாவுக்கு சவால் விடும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த படம் 4 நாளில் 400 கோடி அளவில் வசூலை வாரி குவித்து சாதனை படைத்துள்ளது.

இந்த நிலையில், 2.0 படத்தை 2019-ம் ஆண்டு மே மாதத்தில் சீனாவில் வெளியாகும் என்று அறிவித்திருக்கிறது லைகா நிறுவனம். இது தொடர்பாக லைகா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

“சோனி, வார்னர் பிரதர்ஸ், யூனிவர்சல், டிஸ்னி உள்ளிட்ட தயாரிப்பு நிறுவனங்களின் படங்களைத் தொடர்ந்து சீனாவில் வெளியிட்டு வரும் எச்.ஒய் (HY) நிறுவனம், லைகாவுடன் இணைந்து ‘2.0’ படத்தை சீனாவில் வெளியிடுகிறது..

2019-ம் ஆண்டு மே மாதம் இப்படம் 10,000 திரையரங்குகளில், 56,000 திரைகளில் மிகப் பிரம்மாண்டமாக வெளியாகும். இதில் சுமார் 47,000 திரைகள் 3டி திரைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டுப் படங்களில் சீனாவில் மிக அதிகமாக 3டி திரையில் வெளியாகும் படமாக ‘2.0’ இருக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: 47000 3D screens will release Rajini's 2.O In China, Lyca announcement, சீனாவில் 47ஆயிரம் 3டி திரைகளில் வெளியாகிறது ரஜினியின் 2.O: லைகா அறிவிப்பு
-=-