ஐதராபாத் முத்தூட் நிதி நிறுவனத்தில் 46 கிலோ தங்கம் கொள்ளை

Must read

ஐதராபாத்:
சிபிஐ போர்வையில் ஐதராபாத் முத்தூட் நிதி நிறுவனத்தில் 46 கிலோ தங்கத்தை கொள்ளையடித்த 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
 

ஐதராபாத்தில் உள்ள முத்தூட் நிறுவனத்திற்கு இன்று 5 பேர் வந்தனர். ஒரு பெரிய ஊழல் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர். இதில் ஒருவர் போக்குவரத்து போலீசாரை போல் உடை அணிந்திருந்தார். சோதனைக்கு ஒரு ஊழியர் மறுப்பு தெரிவித்தார். அவரை துப்பாக்கி முனையில் மிரட்டி கழிப்பிடத்தில் அடைத்தனர். தங்க நகைகளை படுக்கை விரிப்பில் சுருட்டிக் கொண்டனர்.
அவர்கள் கொள்ளையடித்துக் கொண்டு வெளியேற முயன்ற போது அவர்களை காவலர்கள் தடுத்துள்ளனர். அப்போது அந்த நபர்கள் துப்பாக்கியை காட்டி ஊழியர்களை மிரட்டி ரூ. 12 கோடி மதிப்பிலான தங்க நகைகளுடன் ஓட்டம் பிடித்தனர்.
சிசிடிவி கேமிராவில் உள்ள பதிவுகளின் அடிப்படையில் போலீசார தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ஐதராபாத்&மும்பை நெடுஞ்சாலையில் சங்கரெட்டி மாவட்டம் ராமச்சந்திராபுரத்தில் இருந்து ஷகிராபாத் பகுதியில் இந்த தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

More articles

Latest article