45வது நினைவு தினம்: பெரியார் சிலைக்கு ஸ்டாலின், கனிமொழி மரியாதை..!

சென்னை:

ந்தை பெரியாரின் 45வது நினைவு தினத்தை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக எம்பி. கனிமொழி உள்பட திமுகவினர் மலர்தூவி மரியாதை செலத்தினார்.

தந்தை பெரியாரின் 45வது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப் பட்டு வருகிறது. இதையொட்டி பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சென்னை  சிம்சன் பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு திமுக தலைவர் ஸ்டாலின், திமுக எம்.பி. கனிமொழி உள்பட திமுக நிர்வாகிகள்  மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் திகவினரும் மரியாதை செலுத்தினார். மேலும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: 45th Memorial Day, E.V.R.Periyar, Honoring Periyar Statue, kanimozhi, memorial day, stalin, கனிமொழி, பெரியார் நினைவு நாள், மரியாதை!, ஸ்டாலின்
-=-