பீஜிங்:

சீனாவின் வுகானில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் அங்கு படிப்படியாக குறைந்து வரும் நிலையில், உலக நாடுகளில் வேகமாக பரவி வருகிறது…  இதுவரை 109 நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா தற்போது சீனாவில் தனது தாக்கத்தை குறைத்து வருகிறது.,

சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றால் 80,735 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் (ஞாயிற்றுக் கிழமை)  40 பேருக்கு மட்டுமே பரவி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதுபோல 22 பேர் மட்டுமே பலியாகி உள்ளதாகவும், 1535 பேர் கொரோனா தாக்குதலில் இருந்து விடுபட்டு குணமடைந்து இருப்பதாகவும் தெரிவித்து உள்ளது.

கடந்த சனிக்கிழமை என்று 70 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு இருந்ததாகவும், தொடர்ந்து பாதிப்பு குறைந்து வருவதாகவும் சீனா சுகாதாரத்துறை தெரிவித்து வந்த வரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெகுவாக குறைந்துள்ளதாக தெரிவித்து உள்ளது.

சீனாவில், கொரோனா பாதிப்பு காரணமாக 80, 735 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், இதுவரை 3,119 பேர் பலியாகி இருப்பதாகவும், அதே வேளையில் கொரோனா வைரஸ் தொற்று குணமடைந்து, 1,535 பேர் வீடு திரும்பி உள்ளதாகவும் தெரிவித்து உள்ளது.

சீனாவில் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ள நிலையில், உலக நாடுகளில் 109 நாடுகளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.  சீனாவைத் தொடர்ந்து, இத்தாலி, தென்கொரியா, ஈரான் நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வரும் நிலையில், இந்தியா உள்பட பல நாடுகளும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி உள்ளது..

கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை ஆட்கொண்டு வருவதை தடுக்க உலக சுகாதார நிறுவனமும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது தொடர்பாக உலக நாடுகளுக்கு பல்வேறு அறிவுரைகளையும் கூறியுள்ளது.