திருவண்ணாமலை: தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கொலை, கொள்ளை சம்பவங்கள் காவல்துறையினரின் கையாலாகாதனத்தை வெளிச்சம் போட்டு காட்டுவதாக சமூக ஆர்வலர்களும், நெட்டிசன்களும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

சென்னையின் முக்கிய பகுதியான பெரம்பூர் பகுதியில், வெல்டிக் வைத்து ஷட்டரை வெட்டி நகைக்கடை கொள்ளை நடைபெற்ற அடுத்த இரண்டு நாளில் திருவண்ணாமலையில், 4 ஏடிஎம் இயந்திரங்கள் வெல்டிங் வைத்து தகர்க்கப்பட்டு ரூ.75 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எதிர்க்கட்சியினர் மீதான  தேவையற்ற புகார்களுக்கு ஓடோடிச் சென்று சேவைபுரியம், காவல்துறை, கொலை, கொள்ளை, திருட்டுத்தனமாக மது விற்பனை, போதைப்பொருட்கள் விற்பனை போன்றவற்றை கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்க்கிறது. கடந்த அதிமுக ஆட்சியில் இருந்தபோது, தற்போது போலீஸ் பேட்ரோல் (இரவு ரோந்து) கிடையாது. அதுபோல குற்றவாளிகள் தொடர்பாக பொதுமக்கள் புகார் அளித்தால், புகார் அளிக்கும் பொதுமக்களுக்கே பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. புகார் கொடுப்பவர்கள் சமூக விரோதிகளிடம் அடையாளம் காட்டப்படுகின்றனர்.

டாஸ்மாக் கடையையும் திறந்து வைத்துக்கொண்டே, அதனுடன் குடிகாரர்கள் குடிக்க பார்களையும் திறந்து வைத்து கல்லா கட்டி வரும் தமிழ்நாடு அரசு, பாரில் குடித்துவிட்டு வெளியே வருபவனை, பிடித்து,  குடித்திருக்கிறாய் என அபராதம் விதிக்கும் அவலம்தான் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.  பார் இல்லையென்றால், யாரும் அங்கே சென்று குடிக்கமாட்டான். ஆனால், அதை தடுக்காமல், அப்பாவி மக்களிடம் பணத்தை வசூலிப்பதில் காட்டும் காவல்துறையினர், கொஞ்சம் மக்கள் நலனிலும் அக்கறை காட்ட வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

அதுபோல முடிந்துபோன பல வழக்குகளை மீண்டும் தோண்டியெடுத்து, எதிர்க்கட்சியினரை முடக்கும் செயல்களிலேயே அதிக ஆர்வம் காட்டும் காவல்துறை யினர், தற்போதைய நிலவரம் குறித்து கவலைக்கொள்வதில்லை என்பதே அவர்களின் அன்றாட நிகழ்வுகளில் தெரிகிறது.

இதுபோன்ற செயல்களில் கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டிய டிஜிபி, அவ்வப்போது மீசையை முறுக்கிக்கொண்டு,  ஏதாவது ஒரு தகவல் குறித்து, யுடியூபர் போல  வீடியோ வெளியிட்டுவிட்டு, தனது பணி முடிவடைந்ததுபோல செயலாற்றி வருகிறார். கொலை, கொள்ளை, போதை மருந்துகள் விற்பனையை தடுக்காமல், அரசியல் கட்சியினருக்கு  சலாம் போட்டுக்கொண்டு செல்லும் நிலையே தொடர்கிறது. காவல்துறையினரின் கையாலாகாத தனத்தால், இன்று தமிழ்நாட்டில் கொள்ளை சம்பவங்கள் நாள்தோறும் நடைபெறும் அவலம் ஏற்பட்டுள்ளது.

நேற்று முதினம் இரவு,   திருவண்ணாமலை மாவட்டத்தில்  அடுத்தடுத்து 4 ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து ரூ.75 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மணலூர்பேட்டை சாலை மாரியம்மன் கோவில் தெரு, தேனிமலை பகுதி, போளூர் பஸ் ஸ்டாண்ட் ஆகிய மூன்று இடங்களில் அமைந்துள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம், கலசபாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் அமைந்துள்ள ஒன் இந்தியா ஏடிஎம் ஆகிய இடங்களில்தான் இந்த கொள்ளை சம்பவம் ஒன்றுபோல அரங்கேறியுள்ளது. திருவண்ணாமலையில் இருந்து கலசப்பாக்கம் ஒன் இந்தியா வங்கி கிளை சுமார் 15 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. அதே போல போளூர் எஸ்பிஐ வங்கி ஏடிஎம் 35 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது

எல்லா இடங்களிலும் பணம் கொள்ளை போனதுடன், இயந்திரங்களும் எரிந்து போயிருந்தன. இந்த ஏடிஎம் மையங்களில் இருந்து கரும்புகை வெளியேறியதைப் பார்த்தே பொதுமக்களுக்கு இது குறித்து தகவல் தெரிந்தது. அதன் பிறகு அவர்கள், அதன் பிறகு அவர்கள், போலீசுக்குத் தகவல் தெரிவித்தனர். நான்கு இடங்களுக்கும் போலீசார் நேரில் வந்து பார்வையிட்டனர்.

இரவு நேர போலீஸ் ரோந்து இருக்கும்போது, எப்படி 4 இடங்களில் கொள்ளை சம்பவம் நடைபெற்றது என்பது கேள்விக்குறியாகி உள்ளது. அந்த பகுதியில் ரோந்து செல்ல வேண்டிய ரோந்து போலீசார் எங்கே சென்றனர். அவர்கள் ஏன் ரோந்து செல்லவில்லை. ஒருவேளை ரோந்து போலீசார் பணி தற்போதுகிடையாதா? என பல்வேறு கேள்விகளை பொதுமக்கள் எழுப்பி வருகின்றனர்.

திருட்டு நடைபெற்றுள்ளது குறித்து பொதுமக்கள் புகார் அளித்த பிறகே காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வருகை தந்து ஆய்வு செய்துள்ளனர். ஒரே நபர் இந்த சம்பவங்களில் ஈடுபட்டாரா அல்லது பல்வேறு குழுக்கள் மூலம் இந்த சம்பவம் நடத்தப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. அதேபோல கொள்ளை நடந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களில் காட்சிகளை ஆய்வு செய்து அதற்கேற்ப விசாரணையும் நடந்து வருகிறது.

இந்த கொள்ளை தொடர்பாகத் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேறிய நபர்கள் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கக்கூடும் என்று சந்தேகம் எழுந்துள்ள நிலையில் அமைக்கப்பட்ட தனிப்படைகளில் சில ஆந்திரப்பிரதேசம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களுக்கு சென்றுள்ளன.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து தமிழ்நாடு வடக்கு மண்டல ஐஜி கண்ணன் ஆய்வு செய்து செய்தியாளர்களிடம் கூறுகையில், “குறிப்பிட்ட சில ஏடிஎம்களை குறி வைத்து இந்த திருட்டை நடத்தியுள்ளனர். மேலும் இதை வெல்டிங் இயந்திரத்தைப் பயன்படுத்தி செய்துள்ளனர். தற்போது விசாரணை ஆரம்பக் கட்டத்தில் உள்ளது. தொழில்நுட்ப ரீதியாக எங்களுக்கு சில தரவுகள் கிடைத்துள்ளன. அவற்றை அடிப்படையாக வைத்து புலனாய்வு செய்துவருகிறோம்.

இதில் எத்தனை நபர்கள் ஈடுபட்டுள்ளனர் என்பதை உறுதியாக தற்போது கூற இயலாது. ஆனால் இந்த திருட்டினை குழுவாகவே செய்துள்ளனர் என்பது தெரிகிறது,” என்றார் அவர்.

பாதுகாப்பு கோளாறு குறித்து விசாரணை செய்து வருவதாகவும், கண்ணன் கூறியுள்ளார். “இந்த ஏடிஎம் இயந்திரங்களின் உள் அமைப்பு, செயல்படும் முறை ஆகியவற்றை நன்கு அறிந்த ஒருவர் இதில் ஈடுபட்டிருக்கக்கூடும். மகாராஷ்டிரம், ஒடிசா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் இதோ முறையில் ஏடிஎம் திருட்டுகள் நடந்துள்ளன” என்றும், திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையில் அரியானா மாநிலத்தை சேர்ந்த கொள்ளையர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். சந்தேகம் தெரிவித்து உள்ளார்.

இவ்வளவு பெரிய கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி உள்ள நிலையில், அங்கு நேரடியாக சென்று களஆய்து, அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டிய டிஜிபி சைலேந்திரபாபு,  காவலர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.

அதில், திருவண்ணாமலை ஏ.டி.எம். கொள்ளை சம்பவம் தொடர்பாக தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுடன் இணைந்து காவல்துறையினர் தீவிர வாகன சோதனை செய்ய வேண்டும்.

மாநில எல்லை சுங்கச்சாவடிகளில் தீவிர கண்காணிப்பு நடத்த வேண்டும்.

அண்டை மாநில போலீசாருடன் இணைந்து தீவிர வாகன தணிக்கை சோதனை நடத்த வேண்டும்.

கொள்ளையர்கள் தமிழகத்திலேயே தங்கி உள்ளார்களா என்பதை கண்டுபிடிக்க,

தனியார் விடுதிகளில் சோதனை நடத்ததுங்கள். என அறிவுரை கூறி உள்ளார்.

உண்மையிலேயே டிஜபி சைலேந்திரபாபு காவல்துறையின் தலைவராக இருக்கிறாரா, இல்லையா என்பதே கேள்விக்குறியாக இருப்பதாக சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சென்னையில் ஒரு மணி நேரத்தில் அடுத்தடுத்து 6 இடங்களில் செல்போன் பறிப்பு