சென்னை: ரூ.430 கோடி மதிப்பில் சென்னையில் 372 கழிவறைகள் கட்ட தனியாருக்கு சென்னை மாநகராட்சி ஒப்பந்தம் வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை மாநகராட்சி பிப்ரவரி 23ந்தேதி வெளியிட்ட தகவலின்படி,  ரூ.430.11 கோடி மதிப்பில் பொதுமக்கள், தனியார் பங்களிப்புடன் பொதுக் கழிவறைகள் கட்டப்படவுள்ளதாகவும்,. சென்னையில் 3 மண்டலங்களில் உள்ள பொதுக் கழிவறைகளை பொதுமக்கள், தனியார் பங்களிப்பு திட்டத்தின் கீழ் 8 ஆண்டுகள் பராமரிக்கும் வகையில் பணிகளை சென்னை மாநகராட்சி மேற்கொள்ள இருப்பதாகவும் அறிவித்தது. அதன்படி, மொத்தம் 362 இடங்களில் ரூ.430.11 கோடி மதிப்பில் பொதுமக்கள், தனியார் பங்களிப்புடன் பொதுக் கழிவறைகள் கட்டப்படவுள்ளன. இதற்கான பணிகள் ஏப்ரல் மாதம் முதல் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

‘இந்த நிலையில், ராயபுரம், திருவிக நகர், தேனாம்பேட்டை மண்டலங்களில் கழிவறை கட்டுவதற்கான ஒப்பந்தம் தனியார் நிறுவனத்திடம் வழங்கப்பட்டு உள்ளது.

இந்தப் பணிகள் அனைத்தும் வரும் ஏப்ரல் மாதம் தொடங்கும். ஓராண்டு காலத்திற்குள் கட்டுமானப் பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேம்பாடு மற்றும் கட்டுமான பணிகள் நிறைவு பெற்றவுடன் கழிவறைகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும்.

இந்த நவீன கழிவறைகளில் பொதுமக்களின் கருத்துகள் மற்றும் புகார்களை தெரிவிக்கும் வசதி, சிசிடிவி, மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற கட்டமைப்பு உள்ளிட்டவை இருக்கும்” என்று அவர் கூறினார்.