2ஜி மேல்முறையீடு வழக்கு: அக்டோபர் 9ம் தேதிக்கு ஒத்தி வைப்பு

டில்லி:

2ஜி மேல்முறையீடு வழக்கை அக்டோபர் 9ந்தேதிக்கு டில்லி நீதி மன்றம் ஒத்தி வைத்தது.

2ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பான வழக்கில் சிபிஐ நீதிமன்றம் அனைவரையும் விடுதலை செய்த நிலையில் விடுதலையை எதிர்த்து, டில்லி உயர்நீதி மன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் கடந்த மார்ச் மாதம்  19ந்தேதி மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் கடந்த மார்ச் மாதம் 21ந்தேதி நடைபெற்ற விசாரணையின்போது,  வழக்கு குறித்து முன்னாள் அமைச்சர் ராஜா, திமுக எம்.பி. கனிமொழி உள்பட குற்றம்சாட்டப்பட்ட அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை தள்ளி வைத்தார்.

இந்த நிலையில், 2ஜி மேல்முறையீடு வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இன்றைய விசாரணைக்கு கனிமொழி, ராஜா சார்பாக யாரும் ஆஜராகாததால்,   வழக்கை அக்டோபர் 9ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக அறிவித்து உள்ளது.
English Summary
2G Spectrum Appeal Case: Delhi court Postponed to October 9