டந்த 5 ஆண்டுகளில் 200 பேரை புலிகள் கொன்றதாகவும்  கூறப்பட்ட நிலையில், இந்தியாவில் 2,300 பேர் யானைகளால் கொல்லப்பட்டனர், என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வெள்ளிக் கிழமை மக்களவையில் தெரிவித்தது.

கடந்த ஐந்தாண்டுகளில் இந்தியாவில் யானைகளும், புலிகளும் நடத்திய மனித உயிரிழப்புகளுக்கு பலியானோர் எண்ணிக்கை குறித்து,  கடந்த  வெள்ளிக்கிழமை மக்களவையில் கேரளாவைச் சேர்ந்த அனோ ஆன்டனியோ எழுப்பிய கேள்விக்கு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பாபுகுல் சுப்ரியோ மேற்கண்ட பதில் அளித்ததோடு கடந்த ஆண்டு மட்டும் கிட்டத்தட்ட 494 பேர் யானைகளால் கொல்லப்பட்டனர் என்றும் கூறினார்

அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் மட்டும் கடந்த வருடத்தில் 403 பேர் யானைகளால் பலி யானர்கள் என்றும் , நாகலாந்து மாநிலத்தில் 397 பேரும், ஜார்கண்ட் மாநிலத்தில் 349 பேரும் யானைகளால் பலியானர்கள் என்றும் அவர் தெரிவித்தார்

புள்ளிவிபரங்களின் அடிப்படையில் 2017-2018 ல் யானைகளால் பலியானோர் 516 ஆகவும், 2018-2019 ல் 494 பலியானதாகவும் தெரிவித்தார்.

இந்திய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் (NTCA) மூலம் நிர்வகிக்கப்படும் புராஜக்ட் டைகர் மூலம் இந்தியாவில் 50 புலிகள் காப்பகங்கள் உள்ளன. உலகில் 70% புலிகளுக்கு தாயகமாக விளங்குவது இந்தியா தான் என்றும் 2006 ல் 1411 புலிகளும், 2010 ல் 1706 புலிகளும், 2010 ல் 2216 புலிள் நாட முழுதும் உள்ளதாகவும் 2017ம் ஆண்டு எடுக்கப்பட்ட விபரங்களின் அடிப்படையில் 27312 யானை கள் உள்ளதாகவும், 2018ம்ஆண்டு 75 யானைகள் இறந்ததாகவும், 2015-2018 காலக்கட் டத்தில் மொத்தம் 373 யானைகள் இறந்ததாகவும் அவர் கூறினார்

-செல்வமுரளி