டெல்லி:

ஆங்கில புத்தாண்டு என்றாலே எல்லோரது மனிதிலும் உறசாகம் குடி கொண்டுவிடும். வயது வித்தியாசம் இன்றி நள்ளிரவில் அனைவரும் ஒருவொருக்கொருரர் வாழ்த்துக்களை பரிமாறி கொள்வார்கள். இந்த வகையில் இன்று பிறந்த புத்தாண்டிற்கும் கொண்டாட்டத்திற்கு பஞ்சமில்லை.

நாடு முழுவதும் உற்சாகமாக 2017ம் ஆண்டை வரவேற்கும் விதமாக மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். தலைநகர் டெல்லியில் கடும்குளிரையும் பொருட்படுத்தாமல் நள்ளிரவுல் ஏராளமானோர் புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தனர். பழையன மறந்தும் புதிய சிந்தனைகள், எதிர்பார்ப்புகள், நம்பிக்கையோடு பிறந்துவிட்டது புதிய ஆண்டு 2017. உலகம் முழுவதும் முக்கிய நகரங்களில் வாண வேடிக்கையுடன் புத்தாண்டை உற்சாகமாக வரவேற்றனர். புத்தாண்டு பிறந்ததையொட்டி நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் ஆடல், பாடல் கொண்டாட்டம் களைகட்டியது. வட மாநிலங்களில் தற்போது கடுமையாக குளிர் நிலவி வருகிறது.

டெல்லியில் கடும்குளிரையும் பொருட்படுத்தாமல் நள்ளிரவில் திரண்ட இளைஞர்கள் புத்தாண்டை வெகுவிமரிசையாக கொண்டாடினர். மத்தியபிரதேசம், ஹைதராபாத், பெங்களூரில் வெகு விமரிசையாக புத்தாண்டு கொண்டாடப்பட்டது. புதுச்சேரி கடற்கரையில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் குதுாகலத்துடன் புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தனர்.

சென்னை

தமிழகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியிருந்தன. சென்னை மெரீனா கடற்கரையில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தனர்.
2017ம் ஆண்டு புத்தாண்டை வரவேற்க சென்னை மெரீனா கடற்கரையில் ஆயிரக்கணக்கானோர் குவிந்திருந்தனர். நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறந்ததும் இளைஞர்கள் நடனமாடியும், ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை தெரிவித்தும் புத்தாண்டை கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

மேலும் சென்னையில் உள்ள பல்வேறு பூங்காக்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், மனமகிழ் மன்றங்களில் ஆட்டம், பாட்டத்துடன் உற்சாகமாக கொண்டாடினர். கேக் வெட்டியும் புத்தாண்டை வெகு விமரிசையாக கொண்டாடி மகிழ்ந்தனர். அப்போது அங்கு கூடியிருந்தவர்கள் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
அதேபோல், சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் குவிந்த ஏராளமானோர், ஆடிப்பாடி புத்தாண்டை வரவேற்றனர். புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு சென்னை மெரீனா கடற்கரை, பெசன்ட் நகரில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டிருந்தனர்.

புத்தாண்டையொட்டி கோயில்களில் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. வடபழனி முருகன் கோயில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், மாங்காடு காமாட்சி அம்மன் கோயில் உள்ளிட்டவற்றில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். கிறிஸ்தவ தேவாலயங்கள், வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. மதுரை, திருச்சி, கோவை, நெல்லை உள்ளிட்ட இடங்களிலும் மக்கள் புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடினர். இன்ற இரவு வரை கொண்டாட்டம் தொடரும் என்பதில் சந்தேகமில்லை.