2016 புத்தாண்டு பலன்: மகர ராசி அன்பர்களுக்கு

magharam

அஷ்டமத்தில் குரு, சந்திரன் இணைந்து, கெஜகேசரி யோகத்தை தந்திருப்பதால், பல நாட்களாக இழுத்துக் கொண்டு வந்த சுபகாரியங்கள், சுபிட்சமாக நிறைவடையும். வாகன விருத்தி, வீடு அமையும் யோகம் அத்தனையும் நடைபெறும். உடன் பிறப்பால் பலன் உண்டு.

லாபஸ்தானத்தில் சனி, சுக்கிரன் அமைந்ததால், படிப்படியாக வாழ்க்கை உயரும். உறவினர்களால் நன்மைகள் ஏற்படும். ஜீவனஸ்தானத்தில் செவ்வாய் இருக்கிறார். வியபாரம் வளரும். புதிய வருமானத்திற்கு வழி பிறக்கும். தடைபட்ட கல்வி தொடரும். கடன் சுமை குறையும்.

பாக்கியஸ்தானத்தில் இராகு உள்ளார். பூர்வீக சொத்தில் சற்று வில்லங்கம் ஏற்படுத்தும். வழக்கு இருந்தால் வெற்றி அடையும். விரயஸ்தானத்தில் உள்ள சூரியன், சற்று குடும்பத்தில் பிரச்னையை உருவாக்குவார். ஆகவே நிதானம் தேவை. சிவபெருமானின் அருளால் இவ்வாண்டு உங்களுக்கு அருமையான ஆண்டாக அமைய வாழ்த்துக்கள்.

உங்கள் இராசிக்கான பரிகாரம் : ஞாயிற்று கிழமையில், கோதுமையால் தயாரித்த உணவை தானம் செய்யுங்கள். ஞாயிற்று கிழமையில், சூரிய பகவானை வணங்குங்கள். சூரிய பகவானுக்கு உகந்த காயத்திரி மந்திரத்தை 9 முறை உச்சரிக்கவும். பாதகங்களும் சூரிய பகவானின் அருளால் சாதகமாக மாறி உங்கள் வாழ்க்கையை ஜொலிக்க வைப்பார்.

ஜோதிடமாமணி லயன் கே. விஷ்வேரன்