ல் பாசோ, டெக்சாஸ்

டெக்சாஸ் மாகாணத்தில் எல் பாசோவில் உள்ள வணிக வளாகத்தில்  நடந்த துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள எல் பாசோ  நகரில் கிளிலோ விஸ்டா மால் என்னும் வணிக வளாகம் அமைந்துள்ளது. உள்ளூர் நேரப்படி நேற்று காலி சுமார் 10 மணிக்கு இந்த வளாகத்தில் உள்ள வால்மார்ட் நிறுவன விற்பனை அகத்தில் அடையாளம் தெரியாத சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் 20 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

மேலும் சுமார் 26 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் உள்ளூர் மருத்துவமனை 11 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாகச் சந்தேகப்படும் நபர்களில் ஒருவர்  கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி ராபர்ட் கோம்ஸ் தெரிவித்துள்ளார். இந்த துப்பாக்கிச் சூட்டில் மூவர் சம்பந்தப்பட்டுள்ளதாக எல் பாசோ நகர மேயர் டீ மார்கோ தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட பாட்ரிக் குருசியஸ் என்னும் 21 வயதான  இளைஞர் டெக்சாஸ் மாகாண தலைநகர் டல்லாஸ் அருகில் உள்ள ஆலென் என்னும் சிற்றூரைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. இந்த நகர் எல் பாசோவில் இருந்து 650 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர்கள் என அமெரிக்காவின் கேடிஎஸ்எம் 9 நீயூஸ் தொலைக்காட்சி கீழ்க்கண்ட படத்தை வெளியிட்டுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக பலரும் சமூக வலைத் தளங்களில் செய்திகள் வ்3எளி8யிட்டு வருகின்றன. இந்த அமர்க்களத்தில் பல சிறுவர்கள் பெற்றோர்களிடம் இருந்து காணாமல் போய் உள்ளனர். அவர்களைத் தேடிப் பெற்றோர்கள் அலைந்து வருவது மிகவும் துயரமாக உள்ளதாக அந்த பதிவுகள் தெரிவிக்கின்றன.