டெல்லி: மாற்றுத்திறனாளிகள் விமானம் ஏற வசதியாக 20 விமான நிலையங்களில் ஆம்பு லிஃப்ட் வசதி (Ambulifts)  அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் கடந்த 2015ம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில், 6 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் நடைமுறைக்கு வந்துள்ளது.

மத்தியஅரசு கடந்த 2015ம் ஆண்டு, சுகம்யா பாரத் அபியான் என்ற திட்டத்தை தொடங்கி வைத்தது. மாற்றுத் திறனாளி சமூகத்திற்கு சேவை செய்வதற்காகவும், போக்குவரத்தில் பாகுபாடு இல்லாத சம வாய்ப்புகள் மற்றும் உரிமைகளைப் பாதுகாப்பதை நோக்கமாகவும், மாற்றுத்திறனாளிகள் சட்டம், 1995 பிரிவின் 44, 45, 46 இன் கீழ் கொண்டு வரப்பட்டது.

இந்த திட்டம் 6 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  மாற்றுத்திறனாளி விமான பயணிகளின்  பயணத்தை  எளிதாக்ககும்  வகையில், அதாவது ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு நகர்வதை உறுதி செய்யும் நோக்கத்தினை கொண்டு இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த ஆம்புலிஃப்ட்கள் அனைத்தும் ‘மேக் இன் இந்தியா’ கொள்கையின் கீழ் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த ஆம்புலிஃப்ட்களால் 6 சக்கர நாற்காலிகள் மற்றும் 2 ஸ்ட்ரெச்சர்களை ஒரே நேரத்தில் ஒரு உதவியாளருடன் இயக்கும் திறன் கொண்டது மற்றும் இது ஹீட்டிங் வென்டிலேஷன் மற்றும் ஏர் கண்டிஷனிங் சிஸ்டம் (Heating Ventilation & Air-Conditioning system) உடன் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த ஆம்புலிப்ட் வசதியை  இந்திய விமான நிலைய ஆணையம் (Airports Authority of India – AAI)  முதல்கட்டமாக 20 விமா நிலையங்களில் இந்த திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.  இதில், தனது 14 விமான நிலையங்களில் ஆம்புலிஃப்ட்களை (Ambulifts) பொருத்தி செயல்பாட்டுக்கு வந்துள்ள. மீதமுள்ள 6 விமானங்களில்,  குஏரோபிரிட்ஜ் வசதிகள் (aerobridge facilities) இல்லாத காரணத்தினால் அங்கே  ஆம்புலிஃப்ட்கள் நிறுத்தப்பட்டுள்ளன. விரைவில் செயல்பாட்டு வரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த ஆம்புலிஃப்ட்ஸ் வசதியானது தற்போது டெஹ்ராடூன், கோரக்பூர், பாட்னா, பாக்டோக்ரா, தர்பங்கா, இம்பால், விஜயவாடா, போர்ட் பிளேர், ஜோத்பூர், பெல்காம், சில்சார், ஜார்சுகுடா, ராஜ்கோட், ஹூப்ளி ஆகிய 14 விமான நிலையங்களில் செயல்பட்டு வருகிறது, மீதமுள்ள 6 ஆம்புலிஃப்ட்கள் திமாபூர், ஜோர்ஹாட், லே, ஜாம்நகர், புஜ் மற்றும் கான்பூர் விமான நிலையங்களில் செயல்பட வாய்ப்புள்ளது.

மேற்குறிப்பிட்ட 6 விமான நிலையங்களில் ஆம்புலிஃப்ட்ஸ் செயல்பாடுகளானது இம்மாத இறுதிக்குள் தொடங்கும் என்று சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகதத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 ஒரு  ஆம்புலிஃப்ட் யூனிட்டை தயாரிக்க ரூ.63 லட்சம் செலவு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.