டில்லி:

ஆம்ஆத்மி எம்எல்ஏ.க்கள் 20 பேர் தகுதி நீக்கம் செய்யும் தேர்தல் ஆணைய பரிந்துரைக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார்.

எம்.எல்.ஏ. பதவியுடன் கூடுதலாக ஆதாயம் தரும் பதவியையும் வகித்து வருவதால் டில்லி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் 20 பேரை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையர், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு பரிந்துரை செய்தார்.

இந்த விவகாரத்தில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க டில்லி உயர்நீதிமன்றமும் மறுத்து விட்டது. இந்நிலையில் தேர்தல் ஆணைய பரிந்துரையை ஏற்று 20 பேரையும் தகுதிநீக்கம் செய்து ஜனாதிபதி இன்று ஒப்புதல் அளித்தார். இதனையடுத்து 20 பேரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. டில்லி ஆம்ஆத்மி ஆட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.