ஹெச்.ராஜாவை கைது செய்ய போலீஸ் தீவிரம்….2 தனிப்படை அமைப்பு

புதுக்கோட்டை:

ஹெச்.ராஜாவை கைது செய்ய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கலந்துகொண்டார். அப்போது போலீசார், உயர்நீதிமன்றத்துக்கு எதிராக ராஜா அவதூறு கருத்துக்களை வெளியிட்டார்.

இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலானது. பலரும் கண்டனம் தெரிவித்தனர். அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து அவர் மீது திருமயம் போலீசார் 9 பிரிவுகளின் கீழ் இன்று வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மேலும், கணேசன், பழனிவேல்சாமி, சூர்யநாராயணன், கற்பகவடிவேலு, அக்னிபாலா, ராஜேஷ், ஜெயம் சுப்ரமணியன் உள்பட பலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்து. இதில் ஹெச்.ராஜாவுக்கு ஆதரவாக சமூக வலை தளங்களில் கருத்து பதிவிட்டவர்களும் சேர்க்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹெச். ராஜாவை கைது செய்ய 2 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 10 பேர் கொண்ட 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த தனிப்படையினர் ஹெச்.ராஜாவை கைது செய்ய தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
English Summary
2 Police special team formed to arrest H Raja