6 கலெக்டர்கள் உள்பட 19 அதிகாரிகள் இடமாற்றம்….தமிழக அரசு

Must read

சென்னை:

தமிழகத்தில் 6 கலெக்டர்கள் உள்பட 19 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள இடமாற்ற உத்தரவில், ‘‘ சிவகங்கை கலெக்டர் மலர்விழி- தருமபுரி கலெக்டராகவும், கடலூர்- கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே, -கன்னியாகுமரி கலெக்டராகவும், தொல்லியல்துறை இயக்குனர் அன்பழகன், கரூர் கலெக்டராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மீன்வளத் துறை இயக்குனர் தண்டபாணி, கடலூர் கலெக்டராகவும், சென்னை சுகாதார இயக்குனர் விஜயலட்சுமி அரியலூர் கலெக்டராகவும், வணிகவரித் துறை இயக்குனர் மரியம் பல்லவி பால்தேவ் தேனி கலெக்டராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ‘‘லட்சுமிப்ரியா- சன்னை வணிகவரித்துறை இணை கமிஷனர், வெங்கடாஜலம்- பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குனர், கோவிந்தராஜ்-ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

விவேகானந்தன்- புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குனர், பழனிசாமி- தொழில்நுட்ப கல்வி இயக்குனர்,சமயமூர்த்தி- போக்குவரத்து துறை ஆணயைர், சுப்பையன்- தோட்டக்கலைத்துறை, மோகன்-பொதுப்பணித்துறை துணை செயலர், மேகநாத ரெட்டி- நிலநிர்வாக ஆணையர், தயானந்த் கட்டாரியா-பவர் பைனான்ஸ் மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சி கழக தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்’’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Support patrikai.com

பத்திரிக்கை டாட் காம் இணையதள செய்திகளை அதிகளவு விரும்பி படிப்பதற்கு நன்றி. சிறந்த முறையில் செய்திகளை தொடர்ந்து வழங்க பத்திரிக்கை டாட் காம் குழுவிற்கு உங்கள் நிதிப் பங்களிப்பை வழங்கி ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தொடர்ந்து பல்வேறு கோணங்களில் செய்திகளை வழங்கவும், பதிவு செய்யப்படாத அரிய செய்திகளை ஆவணப்படுத்தவும் உங்கள் நன்கொடை உதவிகரமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு ஐயப்பாடும் இல்லை.

More articles

Latest article