t

ராஜேஷ் M செல்வா இயக்கத்தில் கமல்ஹாசன், பிரகாஷ்ராஜ், த்ரிஷா நடிப்பில் தமிழில் தூங்காவனம் என்றும் தெலுங்கில் சீகட்டி ராஜ்யம் என்ற பெயரில் படத்தை எடுத்து முடித்துவிட்டார்கள்.

சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் மொத்தம் முப்பத்தியெட்டே நாட்களில் ஷூட்டிங் முடிந்துவிட்டது. தொடர்ந்து தொழில்நுட்ப பணி துவங்கி, அதுவும் முடிந்துவிட்டது.

ஆனால் கடந்த ஒரு மாதமாகவே, “இப்போது ட்ரெய்லர் ரீலீஸ்.. அப்போது ரிலீஸ்” என்று மாறி மாறி தகவல்கள் வந்துகொண்டே இருந்தன. ரசிகர்களிடையே இது ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இந்த தகவல் கமலின் காதுக்குச் செல்லவும், உடனடியாக சரியான தேதியை அறிவிக்க வேண்டும் என்று முடிவுசெய்தார்.

அதன்படி, “வரும்16ம் தேதி தூங்காவனம் படத்தின் டிரேய்லர் ரிலீஸ் விழா” என்று அறிவித்துவிட்டார்.