சென்னை: தமிழகத்தில் இன்று 23,459 பேருக்கு கொரோனா தொற்று: சென்னையில் 8,963 பேர் பாதிப்பு; 9,026 பேர் குணமடைந்தனர். அதேவேளையில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 231 ஆக உயள்ளது.

தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று இரவு 8மணி அளவில் வெளியிட்டுள்ள தகவலின்படி, தமிழ்நாட்டில் கொரோனா பாசிடிவிட்டி ரேட 15.3 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.  நேற்று மட்டும் புதிதாக 23,459 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

மாநிலம் முழுவதும் நேற்று ஒரே நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 1,53,046. இதுவரை மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை: 5,92,64,199.

நேற்று  23,459 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இவர்களில்  வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் 37 பேருக்குத் தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து 77,20,086 பேர் வந்துள்ளனர். மொத்த பாதிப்பு 28,91,959 ஆக உயர்ந்துள்ளது. தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 13,940 பேர். பெண்கள் 9,519 பேர். மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 16,89,099 பேர். பெண்கள் 12,02,822 பேர். மூன்றாம் பாலினத்தவர் 38 பேர்.

நேற்று தொற்றுக்கு 26 பேர் உயிரிழந்தனர். 11 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள். 15 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் ஆவர். இந்நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 36,956 ஆக உள்ளது.

முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிகளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன. இன்று உயிரிழந்தவர்களில் 23 பேர் நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்களாவர். எவ்வித பாதிப்பும் இல்லாதவர்கள் 3 பேர்.

மாநிலம் முழுவதும் நேற்று தொற்றின் பிடியில் இருந்து  டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 9,026 பேர். இதுவரை  மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 27,36,986 பேர்.

தற்போது மாநிலம் முழுவதும் கொரோனா தொற்றுக்கு 1,18,017 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை1,18,017.

கொரோனா பாதிபிபில் சென்னை முதலிடத்தில் உள்ளது. சென்னையில் நேற்று 8,963 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 6,25,988 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் மட்டும் மொத்தம் 8715 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 8,963. சென்னையில் இன்று சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை (தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட): 50,977.

இன்று சென்னை உள்ளிட்ட 33 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 14,496 பேருக்குத் தொற்று உள்ளது.

இன்று மாநிலம் முழுவதும் 37444 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளும், 21667 ஆக்சிஜன் வசதி இல்லாத படுக்கைகளும், 9226 ஐசியூ படுக்கைகளும் பயன்பாட்டுக்குத் தயாராக இருக்கின்றன.

மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு

அரியலூர்77
செங்கல்பட்டு2,504
சென்னை8,963
கோவை1,564
கடலூர்308
தர்மபுரி165
திண்டுக்கல்109
ஈரோடு355
கள்ளக்குறிச்சி147
காஞ்சிபுரம்802
கன்னியாகுமரி572
கரூர்74
கிருஷ்ணகிரி345
மதுரை631
மயிலாடுதுறை68
நாகப்பட்டினம்76
நாமக்கல்198
நீலகிரி257
பெரம்பலூர் 91
புதுக்கோட்டை 59
ராமநாதபுரம் 89
ராணிப்பேட்டை 461
சேலம் 499
சிவகங்கை 86
தென்காசி 20
தஞ்சாவூர் 410
தேனி177
திருப்பத்தூர் 196
திருவள்ளூர்1,393
திருவண்ணாமலை269
திருவாரூர்119
தூத்துக்குடி 315
திருநெல்வேலி 353
திருப்பூர் 373
திருச்சி 477
வேலூர் 325
விழுப்புரம் 188
விருதுநகர்342

தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பு

மொத்த பாதிப்பு: 231.

டிஸ்சார்ஜ் ஆனவர்கள்: 231.